பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ தொலைக்காட்சி. . . 142 ஒழுங்கீனங்களுக்கு வழி வகுப்பவை. ஆணும் பெண்ணும் பணிக்குச் செல்லும் சிறு குடும்பங்களில் குழந்தை தன் முதல் புரிந்து கொள்ளலை, எழுந்து, உட்கார்ந்து, நடந்து உலகைப் புரிந்து கொள்ளும். முக்கியமான வளர்ச்சிப் பருவங்களையே காப்பகங் களிலும் மழலைப் பள்ளிகளிலும் கழிக்கின்றன. குழந்தைக் காப்பகங்கள், சமுதாயப் பொறுப்புடன் கூடிய தனியார் நிறுவனங் களாலோ, அரசு நிறுவனங்களின் பயிற்சி பெற்ற தாய்மாராலோ பராமரிக்கப்படுவதில்லை. அதிலும், வீட்டு வேலை, கட்டிட வேலை, விவசாயம் சார்ந்த தொழில்கள், ஆலைகள் என்று வயிற்றுப்பாட்டுக்கு உடல் உழைப்பைக் கொடுக்கும் பெற்றோர், தர்மக் காப்பகங்களில் நிகழும் முறைகேடுகளைக் கேட்பதில்லை. அவர்களுக்கு அவர்கள் பணியிடப் பிரச்னைகளும், பற்றாக் குறையும் மிகுதியான தேவைகளும் பிரச்னைகள். அரசின் தர்மக் காப்பகங்களில் பிள்ளைகள் நன்கு வளருகிறார்களா, அரசு வழங்கும் தருமப்பாலோ சத்துணவோ நல்ல முறையில் பிள்ளைகளை வளரச் செய்கின்றனவா என்பதெல்லாம் கவனங் களில் வருவதில்லை. ஏன்? அரசுப் பள்ளிகளில் படிக்கும் சிறுவர், சிறுமியரின் பெற்றோர் அந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள் 'பெற்றோர் நாள்' என்று அறிவித்து வரச் சொன்னாலும், நூற்றுக்குப் பத்துபேர் கூட ஆசிரியர்களிடம் வந்து பேசிக் குறை நிறை அறிவதில்லை. வளரும் தலைமுறைகள் தறிகெட்டுப்போக, அரசியல் கட்சிகள், ஆதரவுக்கரம் நீட்டி, விசுவாசத் தொண்டர்களை வளர்க்கிறார்கள். சினிமா அவர்களின் பேராயுதம். ஒழுக்கம் சாத்தியமாகுமா? புலனடக்கம்...? ஆன்மிக குருவர்க் கமே சிதைந்து கிடக்கும்போது எதைப் பேச? கனவு காண்போம்! 23.'பிளாஸ்டிக் ஆகிவிட்ட பொற்குடங்கள் LDக்கள் தொகைப் பெருக்கம் - கட்டுப்பாடு அதற்காகும் செலவுகள் எல்லாம் பொருளாதாரம் சார்ந்தவை. மக்கள் பெருக்கம்