பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 143 உழைப்பாற்றலை மிகுதிப்படுத்துவதால் வளமை மேம்படும் என்ற நியதி காணாமற் போய் நெடுங்காலமாகிறது. உழைப்பைக் கொடுக்காத பெருங்கூட்டத்துக்கு, சோறு, துணி, கல்வி, நோய்த் தடுப்புடன் சுகாதாரம் எல்லாம் வழங்க வேண்டும். அதற்கு ஆதாரமான நிதி - வரவு - செலவு என்று ஒவ்வோர் ஆண்டும் திட்டம் போடப்படுகிறது. மக்களுடைய வரிப்பணம் வரவு - இது பல்வேறு வகை வரிகளால் அரசுக்குக் கிடைக்கிறது. நிலவரி, சொத்துவரி, மின்சாரக் கட்டணங்கள் என்றெல்லாம் அரசு தங்கள் முதலீடுகள் போல் வரவு ஈட்டும் துறைகள் உண்டு. ஆனால், மருத்துவ - பொதுசுகாதாரம், கல்வி ஆகிய துறைகள் செலவிட்டாக வேண்டும். ஆனால், மின்கட்டண ஏமாற்று சொத்துவரி ஏமாற்றுதல் என்று ஒவ்வொரு பிரிவிலும் அரசுக்குரிய வரவினங் கள் வரவில்லை என்றால், தகராறுதான். ஒரு இல்லத்தரசி எப்படி வருமானத்துக்கும் செலவுக்கும் ஈடுகட்டலாம்; எதிர்காலத்துக்குச் சேமிக்கலாம்; திடீர் செலவுகளைச் சமாளிக்க எதில் சிக்கனம் செய்யலாம் என்று திட்டமிடுவது போன்றது தான் நாட்டுக்கான திட்டங்களும் பொருளாதார நிர்வாகங்களும். நாம் குடியரசான முதல் நிதிநிலை அறிக்கையில் 1 950 - 51 இல், 405கோடி ரூபாயாக மைய வரிவசூல் இருந்தது. இந்நாட்களிலோ, ஏறத்தாழ மூன்று லட்சத்துப் பதினெட்டாயிரம் கோடி என்று கணக்கிடப்படுகிறது. எண்பதுகளின் பிற்பகுதியிலிருந்து வரிச்சுமை மிகவும் கடுமையாகவே உயர்ந்துவந்திருக்கிறது. மத்திய மாநிலங்களில் 80-81 இல் அரசுத் துறை நிறுவனங்களின் மூலம் மத்திய மாநில அரசுகளுக்குக் கிடைத்தது ரூபாய் 25 ஆயிரம் கோடி ரூபாய். மொத்தச் செலவு 37 ஆயிரம் கோடி ரூபாய். வரவைக் காட்டிலும் செலவு 12 ஆயிரம் கோடி ரூபாய் அதிகம். 2002-2003 ஆண்டில் இதே மத்திய மாநில அரசுகளின் வரி வசூல், பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் கிடைத்த தொகை 5 லட்சத்து 12 ஆயிரம் கோடி. ஆனால், செலவினங்கள் 8 லட்சம் கோடி ரூபாய. வரவைக் காட்டிலும் செலவு, 2 லட்சத்து 88 ஆயிரம் கோடி அதிகம். பற்றாக்குறையைச் சமாளிக்கக் கடனுக்கு மேல் கடன். நோட்டை அச்சடித்துப் பணப்புழக்கத்தை அதிகமாக்குகிறார்கள். வட்டிச் செலவுக்கு மட்டும் சென்ற ஆண்டின் வரவு-செலவு கணக்கில் ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.