பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ பிளாஸ்டிஆக்... 144 2004-05 நிதிநிலை அறிக்கையை இங்கே தெரிவிப்பது அவசியமில்லை. தலைசுற்றுகிறது. எல்லோருக்கும் உணவு - பள்ளி மதிய உணவு - (பல்வேறு பெயர்களில் யோஜனாக்கள்!) எல்லாம் எத்தனையோ ஆண்டுகளாகச் சொல்லப்படும் வறுமை ஒழிப்பு, ஆண்டில் நூறு நாட்களுக்கேனும் வேலைக்கு உணவ ளிக்கும் திட்டங்கள்! (மீதி நாட்களுக்கு ஈரத்துணிக்கேனும் வழி இருக்குமா) எல்லாம், எல்லாம். இன்னும் இளைஞருக்கு, படித்த பட்டதாரி இளைஞருக்கு வேலை இல்லை. நிறைவேற்ற உத்தரவாதமில்லாத, எல்லோராலும் ஏற்றுக்கொள்ள இயலாத திட்டங்களால் 20 லட்சம் இளைஞருக்கு வேலை கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளை அமைச்சர்கள் சொல்லிவருகிறார்கள். வேளாண்மையில் 'மரபணு மந்திர வித்துக்களின் இரண்டாம் நிலைத்திட்டம் பற்றி பிரதமர் கூறுகிறார். முதல் புரட்சியில், வெளிநாடுகளிலிருந்து வித்துகள் பெற்று, பூமியை நஞ்சாக்கி, வியாபாரிகளைக் கடன் குழியில் தள்ளி தற்கொலை செய்து கொள்ள வைத்தது. நமது சாலைகளில் புதிய புதிய வண்டிகள், பளபளக்கும் பல வண்ண மாதிரிகள் இரண்டு சக்கர, மூன்று சக்கர ஊர்திகள், பாதசாரி என்பவரே தேவையில்லை என்று தீர்க்கிறது. ஒரு சிறுகுடும்பம் இந்நாள் புழங்கு நீருக்கும் குடிநீருக்கும் செலவழிக்க வேண்டிய பணத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மூன்று பிள்ளைகள், தாய், தகப்பன், கைம்பெண், அநாதைகள், மூன்று மருமகள் , பேரன், பேத்திகள் உண்டு உறங்கி இந்நாட் களைப் போன்ற நெருக்கடிகளும் டாக்டர் தேவைகளும் தெரியாமல் வாழ முடிந்தது. வெள்ளையன் ஆட்சி என்ற ஒன்றே எல்லோருக்கும் முள்ளாக இருந்தது. மக்கள் பெருக்கத்துக்குக் காரணிகளாகக் கருதப்படும் பெண், அன்றாடம் செத்துப் பிழைக்கவில்லை. அந்நாள் எங்கோ ஒன்றிரண்டு குப்பைத் தொட்டி, குளக்கரை என்று குழந்தைகள் அநாதைகளாகவிடப்பட்டதைப் பேசினார்கள். இந்நாட்களில் அநாதைகள், தாயாரால் ஏற்று வளர்க்க முடியாத சிசுக்கள் நூற்றுக்கணக்கில் பல்வேறு அநாதாலயங்களுக்குச் செல்கின்றன. 'ஊனமுற்றவர்கள்’ என்ற தனிப்பிரிவே கல்வி, வேலை வாய்ப்பு என்ற இலக்குகளைப் பற்றி சிறப்புக் கவனஈர்ப்புக் கோரிக்கை