பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 145 வைக்கிறது. ஊனங்கள் அன்றாடம் ஏற்படும் சாலை விபத்துகளால் மட்டு மின்றி, கருவிலேயே ஏற்படக்கூடிய காரணங்களை விழுங்கிவிட்டு அம்பலத்துக்கு வருகின்றன. பெருந்தன்மையுடன் அவ்வப்போது தத்து’ எடுத்துக் கொள்ளும் பெற்றோர் வந்தாலும், தர்ம, குழந்தை விடுதிகள் மேலும் மேலும் உயிர்த்துக் கொண்டிருக்கின்றன. இத்துணை சிக்கல்களையும் எப்படித் தீர்க்க? பங்கிம் சந்திரர், அன்று 'வந்தே மாதரம் என்ற மந்திரச் சொல்லால் காளியை, துர்க்கையை தேச மாதாவாக உருவகித்துப் பாடிய போது, வங்கமாதாவாக அவள் பரிணமித்தாள். ஏழு கோடி மக்கள் 'ஸப்த கோடி கண்ட கலகல நிநாதகராலே, த்விஸப்த கோடி புனஜர்த்ருத கரகரவாலே கே போலே, மாதுமி அபலே! பஹா பல தாரிணிம், நமாமி தாரிணிம் ரிபு தள வாரிணிம், மாதரம்” இந்தப் பாடலை முப்பதாண்டுகளுக்குப் பின்னர் செவிமடுத்த பாரதியார், வங்கமாதாவை முழு இந்திய மாதாவாகப் பார்த்தார். சேதப்பட்டிராத பாரதத்தின் மக்கள் அன்று முப்பது கோடி. இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை! குளிர் பூந்தென்றலும் கொழும் பொழிற்பசுமையும் வாய்ந்து நன்கிலகுவை, வாழிய அன்னை! முப்பது கோடிவாய் நின்னிசை முழங்கவும் அறுபது கோடி தோளுயர்ந்துனக்காற்றவும் திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்? தாயே, நீடுபல்படை தாங்கி முன்னிற்கவும் E_ – 10