பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ பிளாஸ்டிக்... 145 கூடு திண்மை குறைந்தனை யென்பதென்? ஆற்றலின் மிகுந்தனை அரும்பதம் கூட்டுவை! என்றெல்லாம் மக்களே தாயின் வலிமை என்று பறைசாற்றப்படுகிறது. அறிவு நீ! தரும நீ! உள்ள நீ! அதனிடை மரும நீ, உடற்கண் வாழ்ந்திடு முயிர் நீ! தோளிடை வன்பு நீ! நெஞ்சகத்தன்பு நீ! திரு நிறைந்தனை, தன்னிகரொன்றிலை தீது தீர்த்தனை நீர்வளஞ்சார்ந்தனை... 'முப்பது கோடி முகங்கள்; அறுபது கோடி புயங்களின் வலிய திறன்; உயிர்வளமூட்டும் நிலம், நீர், அன்பு, அறிவு, தருமம், அதனிடை விளங்கும் ஆன்ம ஒளி. ஆலயங்களில் இடம் பெற்ற தெய்வச் சிலைகளிலும் தாயே நீ இருக்கிறாய்! இந்த எழுச்சிப் பாடல், அந்நாள் கோடானு கோடி ஆண்கள், பெண்கள் அனை வரையும் இந்த தேசத்துக்காக உயிரையும் கொடுக்கும் ஆற்றலைத் தோற்றுவித்தது. வளமிருக்கிறது, நீரிருக்கிறது; உழைக்கக் கைகள், உயிர் விளங்கும் ஆற்றல் இத்தனையும் போய்விட்டனவா? அந்நாள் அந்நிய அடிமைத்தளைய்ை உடைத்தெறிந்த ஆன்மிக ஆற்றல், இன்னா செய்தவரையும் நாணச் செய்து, நன்னயம் செய்து நண்பர்களாகவே நீடிக்க வைத்திருக்கும் தாயின் ஆற்றல் இந்நாள் இல்லையா? உணவளிக்கும் தாய், அவள் அமுதாய்ச் சுரந்து தரும் அருவிகள்; நதிகள் எல்லாம் இந்நாள், முப்பதிலிருந்து நூற்றிரண்டு கோடி மக்களாகப் பெருகியபோது காணாமல் போய்விட்டாளா? அந்நாட்களில் அந்நியன் எம் உழைப்பையும் செல்வத்தையும் கொள்ளை கொண்டு போனான் என்று வருந்தி எழுச்சி கொண்டீர். இந்நாட்களில் எந்த அந்நியன் கோடானு கோடி கைகளின் உழைப்பையும் திறனையும் கொள்ளை கொள்கிறான்? அடிமைகளை அந்நாள் உழைப்புக்காக மட்டும் உயிர்த் தண்ணிர் ஊற்றுவது போல், சிறிது ஈரமிருக்க உணவு வழங்கி வைத்திருந்தார்கள். அவர்கள் ஊட்டம் பெற்றால், அடிமைச்