பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 147 சங்கலிகளை அறுத்துவிடுவார்கள். அதுமட்டுமில்லாமல், ஏற்கெனவே இந்தச் சமுதாயத்தில் இருந்த சாதி, மத ஒராயிரம் பிரிவுகளையும் இன்னும் பிளவுகளாக்குவதிலும் தீண்டாமைக் கொடுமைகளையும் அந்நியன் தொடவில்லை என்றாலும், சதி"க்கு எதிரான சட்டம் கொண்டு வந்தான்; பெண் குழந்தைகளைக் கொல்லும் வழக்கத்தையும் எதிர்த்தான். கிறிஸ்தவம் என்ற சமயப் போர்வையிலேனும், தீண்டப்படாதவர், பால் மணம் மாறாத கைம்பெண்களை, கல்விக்கண் திறக்கவும், சமுதாய மதிப்பைப் பெறவும் வாய்ப்புகள் அளித்தான். ஆனால், தாயே, உன்னையும் உன் மக்களையும் வளமைத் திட்டங்கள் என்றும் அறிவியல் சாதனைகள் என்றும் கொஞ்சம் கொஞ்சமாகவும், பின்னர், பகாசுர வேகத்துடனும் கசக்கிப் பிழியும் மோசடிகளில் 'குடியாட்சி' என்ற நாடகங்கள் அரங்கேறுகின்றன. முப்பது கோடிகளில் அபலையில்லா வண்மை பொழிந்தவளே, நூற்றுக்கு மேலான கோடிக் கைகளும், மதி நுட்பத் திறன்களும் வெறும் சைபர் கூலிகளாக மாற்றிக் கொண்டிருக்கும் மோசடியில் இளைய சமுதாயம் புதைந்துபோகின்றதே. சப்சிடீஸ்” மானியங்கள் என்ற உயிர்த் தருமங்களில், பிச்சைகளில், கோடானு கோடிகளும் வாழ முடியாது என்றுதான் தாயே, உன் உயிர்த் துடிப்புகளைத் துண்டித்தும், கசக்கி எறிந்தும், சிமிட்டியாலும், தார் பிளாஸ்டிக் முதலிய சீரணிக்க இயலாத பொருட்களால் ‘உன்னை' அழகுபடுத்துவதாகச் சொல்லி, அழித்துக்கொண்டிருப்பவர்கள் உன் பிள்ளைகள்தானே? கோடிகளில் வாணிபங்கள், சொகுசு மாளிகைகள், வாயுவேக, மனோ வேகப் பயணங்கள், விண்வெளிச் சாதனைகள், இவற்றால் உன் வளமை செழிக்க வில்லையே? பூரண கும்பங்கள் வெறும் பிளாஸ்டிக் கும்பங் களாக, படப்பிடிப்புக்கான பொய்யை மெய்யாக்கும் கலைகளில் வெறும் பிம்பங்களாகின்றன. ஒளியும் அழகும் நலங்களும் குதறப்படுகின்றன. அறிவு, ஆற்றல் வீரம் எழுச்சியின் வடிவமான தாய், ஆணவ ஆதிக்கங்களை, அசுரத்தனங்களை மிதித்துக் கொண்டு ஆனந்த நடனம் புரிய எழுவாளா? கோடிகளைத் தரைமட்டமாக்கிப் பூங்காக்களைச் சமைத்து பசுபட்சி, நீர்நிலைகள் இனிய ஒலிகள், மணங்கள் என்று புதிய உலகைப் படைக்க மீட்டுருவாக்கம் செய்ய எழுவாளா? கரும்புகைகளும், சூழும் அச்சங்களும், நச்சுவளையங்களும் உன்னுள் அமிழ்ந்து போக