பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ பிளாஸ்டிக்... 148 வேண்டும். உயிர் துளிர்க்கும் விளைநிலங்கள் ஒழுக்கம் காக்க வேண்டும். மண். மண் புனிதமானது. உயிர்ப்பின் ரகசியங்கள் காக்கப்பட வேண்டும். உழைப்புப் பங்கீடுகளில் மனிதம் புதுமை பெற வேண்டும். பாவங்களும், குரூரங்களும் கோரங்களும் ஆசை அவல அழிவுகளும் புதுப்பிக்கப்படும் மங்கலங்களாக அமைதி நல்க, தாயே நீ மீட்டுருவாக்கம் பெறுவாய்! தாயே! நூற்றிரண்டு கோடிகளும் உன் மாண்பினால் புனிதமாகட்டும்! பழையவை மக்கி மண்ணோடு மண்ணாக, புத்தெழில் வசந்தங்கள் புலரட்டும்! 24. காந்தியின் கனவு ராஜ்ஜியம் பி-சம்பர் 1947ஆம் ஆண்டு. நாட்டு நடப்புகளையும், தலைவர்களின் செயல்பாடுகளையும் கண்டு வருந்தினார் காந்தியடிகள். அப்போது அவர் கூறியவை : "என் சொற்களுக்கு இன்று எந்த மதிப்பும் இல்லை. பழைய நாட்கள் போல் இல்லை. இப்போதெல்லாம் சக்கரத்துக்குள் சக்கரங்கள்! இத்துணை இராணுவத்தாரையும் பார்க்கும்போது பயனுள்ள சேவை எதைச் செய்ய முடியும் என்று தோன்றுகிறது. தெரிந்த முகங்கள் தலை அசைத்து, ஒரு மரியாதை கொடுத்துவிட்டு நடக்கின்றன. எனக்குக் கொடுக்கப்படும் மரியாதை இதுவே: மக்களின் ஒருங்கிணைந்த நம்பிக்கை. அது அந்நாள் மலையை அசைத்தது; ஆனால் இந்நாள்? " காந்தியடிகளின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவர், மீராபென் அம்மை. மார்கரெட் ஸ்லேட்' என்ற அந்தப் பெயரை மாற்றி காந்தியடிகள் இப்படி ஒரு பெயரை வைத்தார். காந்தியடிகள் மறைந்தபின், அவர் கனவு கண்ட இந்தியாவை உருவாக்கும் இலக்கோடு அவர் ஏறக்குறைய பனிரெண்டாண்டுகள் இமாலயச் சூழலில் இயற்கையோடிணைந்த ஆசிரமத்தொண்டில் ஈடுபட்டார். அப்போது, அவர் 'பாபுராஜ் என்ற ஒரு பத்திரிகையைத் தோற்றுவித்து நடத்தினார்.