பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 149 பாபுராஜ் என்று அவர் குறித்த இந்தியா எப்படி இருக்கும்? இன்றைய சூழலில், அதைப்பற்றி நினைத்துப் பார்ப்பது சரியாக இருக்கும். காந்தியடிகள், சுதந்திரம் பெற்றபின், அன்றைய காங்கிரஸ் (பேராயக்) கட்சியைக் கலைத்துவிட வேண்டும் என்று கருத்துரைத்தார். அன்றைய இலட்சியம், அந்நிய ஆதிக்கத்தை எதிர்ப்பதாக இருந்தது. அஹிம்சை முறையில் ஒத்துழையாமை இயக்கம் துவக்கினார். அரச பதவிகள், பட்டங்கள் துறந்து, போராட்டத்துக்காக ஒன்றிணைந்தனர். சட்டமறுப்பு மறியல் என்ற பல்வகைகளிலும் சாத்துவீகமாக உப்பு சத்தியாகிரகப் போரின் பொன்விழா, இந்நாள் எழுபத்தைந்தாவது ஆண்டுவிழா என்று காங்கிரஸ் கட்சி நாடகம் அரங்கேற்றுகிறது. அன்றைய இலக்கு சத்தி க இருந்தது. அது மெய்ப்பட்டது. இன்றைய நாடகங்களின் நோக்கம் யாதாக இருக்கும்? காந்தியடிகள், புதிய இந்தியா என்று கனவு கண்ட இலக்கில், ஒத்துழையாமை எதிர்ப்புக்கூறுகளோ, தியாகம் என்று அன்றைய கடமைகளுக்கு மறு பெயரிட்டுப் பதவிகளுக்கான அடிப்படை அமைக்கும் சூழல் அமையக் கூடாது என்று கருதினார். புதிய உருவாக்கத்தோடு புதிய தொண்டர்கள், புதிய தலைவர்கள், புதிய இலக்குகளில் செயல்படவேண்டும் என்று கருதினார். அது நடக்கவில்லை. தேசத்தியாகம் பதவிகளுக்கான முன்னுரிமை பெற அதே காங்கிரஸ் அமைப்பு தேவையாக இருந்தது. நாடு துண்டாடப்பட்ட நிலையில் அடிகள் மனம் சோர்ந்துதான் முன் குறிப்பிட்ட வருத்தங்களை வெளியாக்கினார். மீராபென், பாபுராஜ் இதழில் இந்தியாவின் புதிய சத்தியப்பாதை அமைப்பை இப்படியெல்லாம் குறிப்பிடுகிறார். 1. இந்த நாட்டின் குடிமக்கள் உணவு-உடை-உறையுள் எல்லாம் உடையவர்களாகத் தன்னிறைவு பெற்றிருப்பார்கள். 2. இந்த அரசு, அறம் சார்ந்த மிக நேர்மையான அரசாக