பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ காந்தியின்... 150 அமையும். எவரும் இங்கே மாளிகைகளில் வசிப்பவர்களாக ஆயிர மாயிரம் ரூபாய்களை, நிர்வாகத்துக்கும் பெட்ரோலுக்கும் செலவழிப்பவர்களாக இருக்க மாட்டார்கள். 3. சட்டங்கள் மிக எளிமையாக இருக்கும். குருதி குடிக்கும் சுரண்டல் (பொய்) வக்கீல்களும் நீதிமன்றங்களும் இருக்காது; தேவையில்லை. 4. காவல்துறை என்பது மக்களுக்கு உண்மையான பாதுகாப்பை அளிக்கும். இராணுவம் என்ற ஒன்று, மக்களின் கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கிக் கொண்டு இயங்கும் தேவையும் இருக்காது. விமானங்கள் தேவையே இல்லை. 5. ஆனால், தொழிற்சாலை முதலாளிகள், பண்ணை ஆண்டை கள் இங்கு இருக்கமாட்டார்கள். 6. இங்கு பள்ளிக்கூடங்கள் இருக்கும். எல்லோருக்கும் கல்வி அறிவாற்றலுக்கான சிந்தனைத் திறனுடன் கூடிய கல்வியும் பயிற்சியும் அளிக்கப்படும். 7. அனைவருக்கும் தேவையான ஆரோக்கிய உணவுக்கான உற்பத்தியில் ஒவ்வொருவரும் தம்தம் உழைப்பாற்றலைக் கட்டாயமாக மனித சமுதாயத்துக்கு நல்க வேண்டும். 8. இந்திய நாடு தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் சுயச் சார்புடன் விளங்கும். இன்னொரு நாட்டின் உதவியைப் பெறும்போது அடிமைத்தனம் கூடவே வந்து சேரும். 9. ஒவ்வொரு பிராந்தியமும், சார்ந்த ஊரும், அவரவருக்கேற்ற வகையில் பொருளாதார சுயச்சார்புடன் தன்னிறைவு பெற வேண்டும். நம் ஆற்றலே பயிர்த் தொழில்தான். கால்நடை வளம், வனவளம் ஆகியவை கிராமக் கைத்தொழில்களில் முழுமையாக ஒன்றுபட்டிருக்க வேண்டும். அந்நிய நாட்டுப் போட்டிகளில்