பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 151 இருந்தும், நம்மிடையே புகும் தனிநபர் போட்டியில் இருந்தும் சுயச்சார்பு பாதுகாக்கப்பட வேண்டும். 10. வனஸ்பதி போன்ற உணவுக்கான பொருட்கள், பெருந்தீனி உற்பத்திக்காக இயங்கும் ஆலைகள் மூடப்பட வேண்டும். இதே போல் துணி, சர்க்கரை, அரிசி மாவு, எண்ணெய் பிழியும் பெரிய ஆலைகள் படிப்படியாக மூடப்படவேண்டும். இந்தத் தொழில்கள், கிராம மக்களின் உழைப்பிலும், வன்மையிலும், உடல்நலங்களிலும் தொடர்பு கொள்ளும் தொழில்களாக மாறவேண்டும். ஆடம்பரப் பொருட்களின் உற்பத்தி கட்டாயமாக நிறுத்தப்பட வேண்டும். 11. இயற்கையோடு இணைந்த வகையில் நிலமும், தொழிலும், உழைப்புப் பகிர்தலின் சமச்சீர்மையுடன் மனிதன் வாழ வேண்டும். 12. மிக ஆடம்பர வசதிகளுடனான அரசு நிர்வாகக் கட்டிடங்கள், அலுவலக வளாகங்கள், அரசை இயக்கும் அலுவலகங் களுக்கான ஆடம்பரங்கள் அனைத்துக்கும் இங்கு இடமில்லை. இந்திய மக்கள் அனைவரும் ஏற்றத் தாழ்வின்றி எளிய கிராமவாசி களாகவே சுயச்சார்பும் நலமுமாக வாழவேண்டும். வாழ்விடங்களும் அப்படியே. 13. மிகப்பெரிய அளவிலான நீர்மின் திட்டம், பாசனத்திட்டம், செயற்கை உரத் தயாரிப்பு ஆகியவை தொடர்பான செயல்பாடுகள், அந்தந்தப் பிரதேச உழவர் பெருமக்களின் கூட்டமைப்புடன் நன்கு ஆராயப்படவேண்டும். அதுவரை, அவை நிறுத்தி வைக்கப்பட வேண்டும். அவர்களுக்குப் பாதிப்பென்று தெரிந்தால் உடனே அவை நிறுத்தப்படவேண்டும் ஆலைகள் மூடப்பட வேண்டும். மாறாக சிறு சிறு பிராந்திய அளவிலான வளர்ச்சித் திட்டங்கள் உழவர் பெருமக்களே ஈடுபட்டு நிறைவேற்றவும் உடனுக்குடன் அவை பயன் அளிக்கும் வகையிலும் அமைக்கப்படல் வேண்டும். 14. வெளிநாட்டிலிருந்து பெற்றிருக்கும் கடன்கள், உதவிகள், பரிசுகள் எல்லாமே கூடிய விரைவில் திருப்பப்படவேண்டும்.