பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ காந்தியின்... 152 எதிர்காலத்தில் நாம் அந்நிய நாட்டைச் சார்ந்திருக்கவேண்டிய கட்டாயம் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட, தடுக்கப்பட வேண்டும். 15. இப்போதைய கல்வித்திட்டம் அடியோடு அகற்றப்பட்டு, சேவா கிராமில் கொடுக்கப்பட்ட ஆதாரக்கல்வித் திட்டம் நாடு முழுதும் கொண்டுவரப்பட வேண்டும் உயர்கல்வி - காலக்கிரமத்தில் ஏற்ற வகையில் திட்டமிடப்படும். அதுவரையிலும் இளைஞர்கள் சமுதாய வளர்ச்சியில் தொண்டாற்றி இளமையின் ஆற்றல்களைச் சமுதாயத்துக்குப் பயன்படுத்த வேண்டும். 16. இந்த நடைமுறைகளுக்கு அடித்தளம் அமைக்க வேண்டு மானால், முதலில் இந்த அரசியல் சாசனம் முழுதுமாக அகற்றப்பட வேண்டும் பின்னரே துவக்கம் பற்றிச் சிந்திக்கலாம். 17. நிர்வாக இயந்திரம் வெகுவாகக் குறைக்கப்பட்டு எளிமையாக இயங்கக்கூடிய முறையில் அமைய வேண்டும்! 18. தேர்தல் புதிய முறையில் திட்டமிடப்பட வேண்டும். மாநிலங்கள் திருத்தி அமைக்கப்பட்ட சிறுசிறு அரசுகளாக இணைந்து மையத்தில் செயல்பட வேண்டும். 19. தேர்தலுக்கான வேட்பாளர், கட்சி சாராத கடுமையான பயிற்சிகளிலும், சோதனைகளிலும் தேர்வு பெற்றிருக்க வேண்டும். 20. உழவரும், தொழிலாளரும், அரசின் உயர்பதவிகளின் பங்கேற்புடன் இயங்கவேண்டும். 21. சட்டங்கள் - மிக எளிமையாக, இந்தியாவின் அடிப்படை மனிதநேய ஆன்மீக ஆற்றலோடு இணங்கிய வகையில், அதிகாரக்குவிப்புகளில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும். 22 தரைப்படை கடற்படை தேவையில்லை. விமான சேவைகள் தேவையில்லை. டிராக்டர், மோட்டார்கார்கள், போக்குவரத்துச் சாதன இயந்திரங்கள் எல்லாம் மக்களுக்கு எதிரானவை. இயந்திர மயமான போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் குறைக்கப்பட வேண்டும்.