பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. நெருக்கடியில் உதிக்கும் யோசனைகள் குறுக்குச் சந்தியில் நெருங்கித் தவிக்கும் உன் மக்களில் இந்நாள் சோதனைகளிலிருந்து மீண்டு வெளிவர உன்னையே வணங்குகிறோம். இங்கிருந்து மீளவேண்டும். அறிவுக் கண் படைத்தோர் இருக்கிறார்கள். அறிவியல் சாதனைகளில் நன்மை எது; தீமை எது என்றே அவர்கள் ஆராய வேண்டும். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பது வெற்றுச் சொல் அல்ல. அழிவு ஆற்றலில் அடுத்தவரை விஞ்ச வேண்டும் என்ற நோக்குகள் இலக்காக இருக்கலாகாது. பாற்கடல் கடைந்தபோது, நஞ்சு முதலில் வந்தது. இந்த நச்சுப் புகைகள் பெண்ணின் உயிராற்றலை அழிப் பதால், அமுது கிடைக்கும் என்று இலக்கு வைக்கும்போது அது பேரழிவையே கொண்டுவரும். நதிகளிலும் கடல்களிலும் சாயப் பட்டறை நச்சுகளும், தோல் பதனிடும் கழிவுகளும், சர்க்கரை ஆலைக் கழிவுகளும் மட்டுமின்றி, அணுஉலைக் கழிவுகளும் கலப்பதுபோல், புனிதமான பெண்ணுடலில் பல்வேறு ரசாயனங் களும் நச்சுத் தொற்றும் சாதனங்களும் கருப்பாதைகளை அடைத்து, போகத்துக்கேற்ற கருவிகளாக்கும் இலக்குகள் என்றும் நன்மை விளைவிக்கப்போவதில்லை. நூற்றாண்டுகளில் பெண்ணடிமையும், தாய்மைச் சிதைப்பும் இந்தப் பூமியின் உயிர்த்துவத்தையே அழித்திருக்கின்றன. நமது நாட்டுப் பண்பாட்டில் ஒவ்வோர் ஆணையும், பூரீ அல்லது திரு என்ற எழுத்துக்களால் இணைத்துக் குறிப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. சில சான்றோர் - துறவிகளை, பூரீ-ல- பூரீ என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த அடையாளம் ஒரு மனிதனின் படைப்பாற்றலை, இல்லறத்தில் ஒடுக்கி, மக்கள் பேறுக்கு மட்டும் வழி அமைத்துக்கொள்ளும் ஒழுக்கத்தைக் குறிக்கும் துறவியாக பிரும்மசரியம் காப்பவர், ஒரு லட்சம் பூரீ அல்லது திரு என்ற அடையாளத்தைப் பெறுகிறார். மக்கள் கட்டுப்பாடு என்றால் ஆண், இந்த வகையில் மனிதன் தனக்கு வசதியாக விலைமகளிர் போகத்துக்கு, சந்ததிக்குப் புனிதம் பெறுவதுதான் நேர்மை.