பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ கெருக்கடியில்... 154 இல்லறம் என்ற பொய்யொழுக்கத்தில் நூற்றாண்டுகளாக மகளிரைக் கட்டிப்போட்டிருக்கிறான். ஒவ்வொரு தலைமுறையும் இந்தப் பிணிப்புகளில் இருந்து விடுவித்துக்கொள்ளும் மகளிர் போராட்டங்கள் உலகு தழுவிய வகையில் நடந்தேறி வந்திருக்கிறது. அவ்வகையில் இந்த ஒழுக்கத்துக்கான போராட்டத்தையும் நாம் முன்னெடுத்துச் செல்வோம். 'அழகு" என்ற ஒரு மோசடி வலை பெண்களுக்கு உகந்த தொழில் அழகு சாதன உற்பத்திகள் என்று வலைவிரித்துச் சுருக்கி இழுக்கும் மோசடிகளில் சிக்காமல் நிமிர்ந்து இளைய சமுதாயம் நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்று ஒன்று சேர்வோம். ஆண்களோடு பெண்களும் என்று விடுதலை மனிதர்களாக முழுமை பெற, அசுரக் கோடிகளை மிதித்துச் சமத்துவம் பெறும் அடிப்படையில் இந்த பாரத மாதாவின் பிள்ளைகள் எழும்பி வருவோம். இந்த லட்சியங்களை விட்டு அன்று இந்நாள் திரும்பிப் பார்க்க இயலாத தொலைவில் வந்துவிட்டோம். ஆனால் நமக்குத் தீர்வு வேண்டும். என்ன செய்வது? முதலில், அறியாமைகளும் வறுமையும் ஒழிய வேண்டும். உழைப்புக்கேற்ற உணவு இல்லை; மதுவருந்துகிறான். அவனுடைய இறுக்கங்களுக்குக் கட்டியவள், கட்டாதவள் பலியாகிறார்கள். இத்தகைய ஆண்களுக்கு இந்நாட்களில் மிக எளிய சிக்கலான கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் வந்திருக்கின்றன. அவர்களை அழைத்து மனதைப் பக்குவப்படுத்தி இணங்கச் செய்ய வேண்டும். பெண், இயற்கையின் பிரதிநிதி. ஆணின் தாக்குதல் இல்லாத வகையில் அவள் படிப்பு, சமூகத் தொண்டு என்று திருமணத்தைத் தள்ளிப் போடலாம். உடல் நலம், மன ஒழுக்கங் களுக்குக் குந்தகமான பொழுதுபோக்கு, சினிமா, தொலைக்காட்சிக் காமக்களியாட்டங்கள் விளம்பர ஆசையில் இருந்து பெண்கள் மீட்கப்பட வேண்டும். கோடி கோடியாகப் புரளும் அழகு சாதனத் தீமை செய்யாத வேறு பயனுள்ள குடிசைத் தொழில்களில் மகளிர் பங்கேற்று சுயசார்பு பெறலாம். தாமதமான திருமணம் என்பது, கணவனும், மனைவியும் இக்கால சமூக நிலை, பொருளாதார மேம்பாடு சுயச்சார்பு ஆகியவற்றில் புரிந்து கொள்ளலுடன்