பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 155 தங்கள் வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கான முதல்படி. உடல் நலங்களுக்கும், சந்ததிகளுக்கும் குந்தகமில்லாத இயற்கை முறைகளை இவர்கள் விவாதிக்கலாம். பெண் 25லிருந்து 28 வரைக்குள் தாயாகும்படி கூடலை நிர்ணயித்துக்கொள்ளலாம். இரு மனம் ஒன்றுபட்டால், நிச்சயமாக முடியும். கூடலில் விந்தணு வெளியாகும்போது ஒருவர் பின்வாங்கலாம். இன்பம் என்பது மன உணர்வுதான். போகம் என்பதற்கு வலிமை கொடுக்காமல் லட்சியத்தை முன்னிறுத்தலாம். பெண் நிணநீர்ச்சுரப்பிகளை ஏறுமாறாகச் செய்யும் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம். மன வலிமையே போதும். வறுமை குலவும் அடித்தளங்களில் சோர்வு போகக் குடிக்கிறார்கள். எனவே மதுவிலக்கும், தீமை இல்லாத விளையாட்டோ பொழுதுபோக்கு மனமகிழ்ச்சியோ இருவருக்கும் அவசியமாகின்றன. அவரவருக்கு ஏற்ற வகைகளில் குழந்தை களுடன் பொழுது போக்கலாம். மனம் இலேசாக இருக்கும். நடைப் பயிற்சி, நல்ல உறக்கம், கட்டுப்பாடான ஒழுக்கம் பெண்மையின் இயல்பில் குறுக்கிடாத கருத்தடையே சாலச் சிறந்தது. ஆசைகளையும், மோகங்களையும் அலைய விடும் சூழலில், அது சரிவராது என்று சொல்வதைவிட, தீங்கில்லா வழி முறைகளை செயல்படுத்தும் முயற்சிகளும் அவசியமானவையே. கருத்தடைக்கான பெண் ஊழியர்கள், உடல் சூடு கண்டறிந்து சினைமுட்டை முதிரும் நாட்களைத் தேர்வு செய்ய, வசதி இல்லாப் பெண்களுக்கு உதவலாம். ஒழுக்கங்களை அலைய விட்டு நோவுக்கு மருந்து என்பதோடு இந்த அடிப்படையிலும் தீவிரம் காட்டலாம். இதற்கு மேல், நமது வசதி வாய்ந்த பெண்கள், அவரவர் ஆண் துணைக்கேற்ப கருத்தடை பராமரிப்பை ஏற்கலாம். ஆண்கள் முனைப்பாக ஒத்துழைக்க வேண்டும். நோய்த்தடுப்புக்கு ஆணுறை ஏற்றது என்றாலும், பெண்கள் எழுச்சி பெற்று, தாங்கள் பலியாகும் மூத்த தொழிலை அறவே ஒழிக்க முனைந்து திரள வேண்டும். இயற்கையினால் இழப்பு ஏற்படும் போது, நான், எனது ரத்தம், எனது சந்ததி என்ற குறுகிய மனப்பாங்குகளில் இருந்து விடுபட வேண்டும். அனாதைக் குழந்தைகளைத் தமதாக்கிக் கொண்டு வளர்க்கலாம். தமிழ்நாட்டுப்