பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ கெருக்கடியில்... 156 பெண்கள், திட்டமிடும் குடும்ப நலத்தில் ஒத்துழைத்திருக்கிறார்கள். ஏன்? இவர்கள் பொருளாதார அழுத்தங்களையும், ஆணின் ஆதிக்கங்களையும் சுமந்து அனுபவித்திருக்கிறார்கள். இங்கே ஒரு தலைமுறைக்கு முன்பே திட்டமிட்ட குடும்ப விழிப்புணர்வு வந்துவிட்டது. என்றாலும், இன்னமும் ஆண்கள் தாமாக முன்வந்து பெண்களின் உடல் நலங்கள் கெடாமல் பொறுப்பை ஏற்பது மிக அவசியமானதாகக் கருதப்படவில்லை. கருச்சிதைவு, வெறும் இடைவெளி அதிகரிப்புக்காக ஒருமுறை செய்து கொள்ளலாம். அதுவே எப்போதும் என்பது மிக மிகத் தீமையான பெண்ணின் மன - உடல் ஆற்றலைக் கெடுக்கும், சிதைக்கும் தீர்வு. எனவே தங்கள் தங்கள் சொந்த அனுபவங்களை வைத்து, ஆனும் பெண்ணும் இந்த மிகப்பெரிய லட்சியத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். சீனத்தில் கட்டாயக் கருத்தடை பலனளித்தாலும் மனங்கள் குவிந்திருப்பதாகச் செய்தி வருகிறது. நமது சமுதாயம் அறுபதுக்கு மேற்பட்ட முதிய சமுதாயமாக, இளைஞர் தங்கள் தாதுக்களை வீண் செய்து ஒளியிழந்த சமுதாயமாக உருவாக்கக் கூடாது. எதிர்கால இந்தியாவின் இளைஞர்கள் இந்த மண்ணுக்குப் புது வடிவம் கொடுப்பவர்கள். காதல் தோல்வி, பரீட்சை தோல்வி, வரதட்சணை மோசடி என்று வாழ்நாட்களை முடித்துக்கொள்வதற்காக இளைஞர்கள் இந்த மண்ணில் உதிக்கவில்லை. இளைஞர்கள் நம்பிக்கையின் ஒளித் தாரகைகள். சினிமாத்திரையோ தொலைக்காட்சித்திரையோ அவர்கள் இலக்குகளாக இருக்கலாகாது. விண்வெளி ஆய்வும், நிலத்தடி ஆய்வும் மனித நேயத்துக்கும், உலக அமைதிக்கு மாகத்தான் இருக்க வேண்டும். நமக்கு உயிரும், வாழ்வும் வளமும் அளிக்கும் மண் எம் தாய். இயற்கையன்னை நம்மை அரவணைக் கிறாள். ஒரு பெண்ணின் இயல்புகளைப் போக விளைவுக்காகக் குலைப்பது இயற்கையன்னைக்கே இழைக்கப்படும் தீமையாகும். எனவே, இயற்கையன்னையை நேசித்துப் போற்றி அவளோடு நாம் வாழ்வோம். உலகை வாழவைப்போம்! இந்நாட்களில் 'முதியோர் கடமை பற்றியும், நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். பழைய நாட்களில், மகனுக்கு முடிசூட்டி விட்டு அரசர்கள், இராணிகள், வானப்பிரஸ்தம்’ என்ற