பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 157 வனவாழ்வுக்குப் போவார்கள். மனித வாழ்வில் நான்காவது நிலை, அனைத்தையும் துறந்து இறுதியை ஏற்கும் காலம். முதியோர் அதிகமாகும்போது, பற்றாக்குறை வாழ்வில் அவர்கள் சுமை ஆகிறார்கள். வீட்டுக்கு மட்டுமன்று, நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் மகள் திருமணமாகி வந்ததுமே, மாமியார் மருமகள் தகராறுகள், பெற்றோர் சுமை என்று கருதும் அபசுரங்கள் குடும்ப ஒற்றுமையில், பாசப்பிணைப்பில் புகுந்து விடுகின்றன. நுகர்பொருள் வாணிபம் தேவையில்லாத வசதி களை, போகங்களைக் கட்டாயமாக்கி இருக்கின்றன. மாமியாரோ மாமனாரோ இவற்றைப் புரிந்துகொண்டு குடும்பத்து அமைதிக்கு ஒத்துழைக்க வேண்டும். இவர்கள் ஒருவகையில் இந்தத் தலை முறைகளின் நெருக்கடிகளில் சிக்காமல் வாழ்ந்துவிட்டார்கள். பார்க்கப் போனால், அரசியலோ, சமூக உறவுகளோ, அதிகமாகச் சிக்கலாய்ப் போனதும் இன்றைய சமுதாயத்தினர் வாழ்வில் சுமையைச் சுமத்தியிருப்பதிலும், இன்றைய முதியோருக்கும் பங்கு உண்டு. தன் சுகம், தன் வசதி என்று வாழ்ந்தவர்களால் முதுமையிலும், மன நிம்மதியுடன் எதையும் யாருக்காகவும், விட்டுக் கொடுக்க முடியவில்லை. வாழ்வாதாரங்களைத் தேடுவதிலேயே வாழ்நாளைக் கழித்துக்கொண்டிருக்கும் அடித் தளத்தில் முதுமை நீட்சி பெறுவது மிகக் குறைவு. அடிதடி மோதல் குரூரங்கள், விபத்துக்கள், அங்கே மிக அதிகமாகி எல்லா வயது மக்களும், மடிவது அந்த மட்டங்களில்தான். ஆனால் தேவையில் லாமல் முதியோரைப் புறக்கணிக்கும் மனப்பாங்கும், அந்நிய நாடுகளில் இளைஞர் பெயர்ந்து சென்றபின் பொருளாதார வளர்ச்சி களுடன் முதுமைகளைச் சுகமாக இன்னமும் தன்னலங்களுடன் வாழவைக்க, வணிக நோக்கில் இல்லங்கள் பெருகுகின்றன. ஒய்வு காலத்தில் சுகமாக வாழலாம். ஐந்து நட்சத்திர விடுதி போன்ற இருப்பிடங்கள், மருத்துவர் வந்து பார்த்து முதுமைபேணும் வசதிகள், பொழுதுபோக்கு (களியாட்ட?) மகிழ்விடங்கள், 'ஆன்மிக"ப் பெரியார் வந்து உங்கள் முதுமைக் காலத்தை அமைதியில் லயிக்க அறிவுரை நல்கும் கூடங்கள் என்று பல்வேறு வசதிகளைக் கண்களையும் கருத்தையும் கவரும் வண்ணப்பட வழ வழத் தாள்களில் விரித்து வாணிப வலைகள் வீசப்படுகின்றன. "பணத்தைக் கொடுத்தால் போதும், அவர்களே எல்லாம் செய்து விடுவார்கள்!' என்ற மனப்போக்கு படித்த நடுத்தர வர்க்கங்களில்