பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ /ெகருக்கடியில்... 158 வழக்கமாகப் பரவி இருக்கிறது. முதியோரின் பங்கு இந்நாட்களில் இளைய தலைமுறைக் குடும்பங்களுக்கு அவசியமான தேவை. தொலைக்காட்சி வசதி, மருத்துவ வசதி, உணவு வசதி, எல்லாம் நானே செய்து கொள்ள முடியும்! ஓய்வூதியம் சலுகைகள் இருக்கின்றன! இவர்கள் தொடர்பு தேவை இல்லை என்று கருதுமளவுக்கு முதியோர் தன்னலம் பாராட்டு வதும் மருத்துவங்கள் பயனில்லா முதுமையை நீட்டிப்பதாகவும் மக்கள் தொகையின் இன்றியமையாத தேவைகளில் முன்னுரிமை கோரும் சுமைகளாகவும் தீர்ந்திருக்கின்றன. இவர்களால் பயனில்லை என்று இளையவர் கருதுமளவுக்கு முதிய சமுதாயம் இளைய சமுதாயத்தினரை வேறுபடுத்திக் குறை கூறுகின்றனர். ஆணோ, பெண்ணோ, இளைய சமுதாயத்தினரின் மனச் சிக்கல்களைப் புரிந்துகொண்டு ஆதரவாக வழிகாட்டிகளாக இருக்கலாம். இந்நாட்களில் இளம் பெண்கள் பலர் இடம் பெயர்ந்து நகர நெரிசல்களில் வாழ்வின் இனிய பருவங்களின் நெருக்கடி களில் மாய்கின்றனர். முதியவர்கள் அவ்வகையில் புறக்கணிக்கப் பட்டாலும், தங்கள் சொந்தக் கருத்துக்களை அவர்கள் மீது திணிக்காமல் அவர்களுக்கு அனுபவ வழிகாட்டிகளாக இயங்க வேண்டும். எத்தனையோ வகைகளில் சேவைகள் செய்யலாம். வசதிகளைப் பங்கிட்டுக் கொள்ளும் கட்டாயங்களில் முன்னுரிமை இளைஞர்களுக்கே இருக்க வேண்டும். மக்கள் பெருக்கப் பொருளாதாரத்தில் முதியோரின் தேவைகள் குறைக்கும் பங்கு இன்றியமையாததாகும். 102 கோடிகளில் நவீன மருத்துவங்க்ளின் பயன்கள் முதுமை நீண்டு செல்வதற்கே முதலிடம் கொடுக்கும் வாணிபமாக வளர்ந்திருக்கிறது. அண்மையில் தன் இரண்டு பிள்ளைகளும் பார்வையற்றோராக இருப்பதனால் மனம் வருந்திய ஒரு கட்டிடத் தொழிலாளியின் மனைவி, பள்ளிக் கல்வியில் இறுதித் தீர்வு எழுதியவனும், எழுதவிருப்பவனும் கண் பார்வை பெற வேண்டும் என்பதற்காகத்துக்கிலேறி தற்கொலை செய்து கொண்ட செய்தி நெஞ்சை உலுக்குகிறது. 'கண்தானம் செய்வீர்” என்ற வகை தொகையில்லாப் பிரசாரம் அந்த ஏழைத் தாயைத் தவறான வழிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. பிள்ளைகளுக்குக் கண் பார்வைக்கான நரம்பே பிறவியில் பாதிக்கப்பட்ட நிலையில் வேறு விழிகள் பொருத்தினாலும் பார்வை வராது என்று மருத்துவர்கள்