பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 159 ஏன் அந்தத் தாயிடம் சொல்லவில்லை? தாய்மை தியாக வடிவமானது. பின்னர் புறக்கணிக்கப்படும் போது, தன்னிரக்கம் கொள்வது இயல்புதான். ஆனால், பிள்ளையோ, சகோதரனோ, கணவனோ, அதற்காக அவளை வருத்துவதோ இளைய சமுதாய மனைவியை அழுத்துவதோ நியாயமன்று. தலைமுறைகளின் புரிந்துணர்வுகள், சமூக நியாயங்கள் எல்லாமே முதியவர்களான ஆண்கள் பொறுப்பில் இருக்கிறது. நாற்பத்தெட்டு வயசில், கருப்பைக் கட்டிகளுக்காகக் கருப்பை நீக்கம் செய்த பெண்ணிடம், இல்லறச் சுகத்துக்குக் குந்தகம் இல்லை’ என்று சொல்வது விபரீதமானது. காரணம், ஆணின் போகம் தேடும் இயல்புதான். 17 வயதிலிருந்து எழுபது வயதுவரை மக்கள் பெருக்கத்துக்குக் காரணமான போக உணர்வு, ஒழுக்கக் கட்டுக்குள் ஒடுங்காத அடித்தளத்தில் ஆரோக்கிய சமுதாயம் என்பது வெறும் பகற்கனவு. 102 கோடிகளின் இரு புஜங்களும், அறிவும், திறனும், மதி நுட்பமும் உதிரியாகப் போகாத ஆற்றலில் இணைய, பாரத மாதா, இயற்கையோடு கூடிய எழிலில் புதுப்பொலிவு பெறுவாள். புலனடக்கத்தை முதன்மைப்படுத்தும் கலைகள், வாழ்வியல் கூறுகளை ஒழுங்கமைக்கும் பொழுது போக்குகள், அடித்தள மக்களின் இறுக்கங்களைத் தளர்த்தி, அவர்களை மேம்படச் செய்ய முடியும். தொழில் நுட்பங்களை அழிவுகளுக்காக வாரி இறைக்காமல் ஊடகங்கள் மக்களின் உண்மையான மேம்பாடுகளுக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களில் அவர்களை ஈடுபடுத்து பவையாக மாற வேண்டும். ஒளிபரப்பு நேரம், மாலை நேரங்களில் சில மணிகள் மட்டுமே என்று குறைய வேண்டும்! வாணிபம் வளமல்ல; மனித ஆற்றலே வண்மை!