பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை 1. கருத்தடை முறைகள் சில 1. யோனிப் பாதைத் தடைகள் ஆரம்ப காலத்தில் இவை பல மாதிரிகளில் பயன் படுத்தப்பட்டன. 1. Vaginal Diaphragms 2.Cervical Cap-Check Pessary. 3. Vault Cap. இவை கூடலுக்குப் பின் அகற்றக்கூடியவை. என்றாலும், வழுவழுத்துப் பொருத்திக் கொள்ள இலகுவான களிம்பு, பசைகள் வேண்டியிருக்கும். விந்தணுக்கள் உயிர்த்துச் செயல்படாத கொல்லி மருந்துகள் சாதனங்களில் பூசப்பட்டிருக்கும். இவை அனைத்துமே பெண்களுக்கு இலகுவானவையாக நம் நாடுகளில் ஏற்கக்கூடியவையாக இல்லை என்பதே உண்மை. 4. ஸ்பாஞ்ச் எனப்படும் உறிஞ்சிதட்டைகள். இதுவும் யோனிப் பாதையில் புகுத்தப்படுவதுதான். விந்துவை உறிஞ்சிக் கொள்ளும். இதுவும் எளிதான பயனுள்ள சாதனமாகவில்லை. 5. விந்தணுக் கொல்லிகள் இரசாயனக் கலவைகள். இவையும் பயன் விளைவிக்கும் சாதனங்களாக நீடிக்கவில்லை. 6. இந்த வகையில், நுரை மாத்திரைகள் பயன்பாட்டுக்கு வந்தன. இந்தியாவிலும், வந்தன. யோனிவாயில் வைப்பவை. 7. பெண்களுக்கான தடுப்புஉறைகள் (Condomes female)இவை இப்போது முற்றிலும் புதிய வசதியான வடிவில் சந்தைக்கு வந்திருப்பதாகத் தெரிகின்றன. என்றாலும், இந்தியாவின் பெரும்பாலான நடுத்தர மக்களிடையே கூடப் பயன்படுத்தும்படி வசதியாக, பயனுள்ளவையாக இல்லை என்பதே உண்மை. 1. அடுத்து வந்த சாதனங்களே, கருப்பையில் புகுத்தப்படும் லூப் போன்ற கருத்தடை வளையங்கள். T வடிவ சாதனங்கள். மிகப் பழமையானது. லிப்பே லூப். (1965) திருத்தப்பட்ட