பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 161 மாதிரிகளில் CUT 200 என்ற மாதிரி 1975 லிருந்து குடும்ப நல மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்பட்டன. லிப்பே லூப் - CUT 200 ஆகிய இரண்டு மாதிரிகளும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. சந்தையில் வாங்க, ML.CU 250. MLCU 375 தவிர அண்மைக்காலங்களில், நோவாT, CUT380A ஆகிய சாதனங்களும் கிடைக்கின்றன. இப்போதெல்லாம், லிப்பே லூப்புக்கு மாற்றாக, CUT. 200 அதிகமாக வழங்கப்படுகின்றன. இவை தவிர மேலே குறிப்பிட்ட சாதனங்கள் விலைக்கு வாங்கி, சமுதாயத்தில் மேல்தட்டில் இருக்கும் பெண்களால் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன. செம்புத் துகள் அணுக்கள் விந்தணுக்களை நசிக்கச் செய்வதாகக் கண்டறிந்த நிலையில் இந்தத் தடைச் சாதனங்களில், 'செம்பு’ கூடியது. இவையே காப்பர்.T, காப்பர்T 200, காப்பர் T380A, காப்பர்T 380S, நோவாT முதலியவை. இவை தவிர கருவுறுதலைத் தடுக்கும் தாதுக்கள் (நிணநீர்ச் சுரப்பிகளின் இயல்பை மாற்றும்) LNG 20 என்ற கருத்தடைச் சாதனமும் புழக்கத்தில் வந்துள்ளது. 2. உட்கொள்ளும் மாத்திரைகள் (Oral Contraceptives) இந்த மாத்திரைகளும் தாதுச் சுரப்பிகளின் இயற்கை அளவில் மாறுதல் செய்து சினைமுட்டை கருவுறுவதைத் தடுக்கும் பயன்களையே இலக்காக்குகின்றன. இவையே மாலா D, மாலா N மாத்திரைகள். மாலாN மாத்திரைகள் குடும்ப நல சிகிச்சை மையங்களில் இந்தியா முழுவதும் இலவசமாக வழங்கப்படுகின்றன. மாலா D குறைந்த விலையில் (அரசு மானியம் பெற்றிருப்பதால்) வழங்கப் படுகின்றன. (இந்த மாத்திரைகளுக்குப் பக்க விளைவுகள் உண்டு) இத்தகைய மாத்திரைகள் மேலும் மேலும் திருத்தியமைக்கப்பட்ட கருத்தடைச் சாதனங்களாகப் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன. 3. தாதுச் சுரப்பிகள் - ப்ரொஜஸ்ட்ரான் - சுரப்பிகளில் மாற்றம் செய்யும் கருப்பையில் புகுத்தும் சாதனம் முன்பே கூறப்பட்டது. இதே அடிப்படையில் கருத்தடைக்கான ஊசிமருந்துகள் வந்திருக்கின்றன. в — — 11