பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ பிற்சேர்க்கை... 162 இந்தியாவில் அறியாமை நிறைந்த பெண்களிடையே மாத்திரைகளை விட, ஊசியே சிறந்ததென்ற கருத்து இருக்கிறது. டெபோ ப்ரோவெரா (DMPA) இந்த ஊசி மருந்து அமெரிக்கத் தயாரிப்பு. ஒரு ஊசி போட்டுக் கொண்டால், மூன்று மாதங்களுக்குக் கருத்தரிக்காமல் தடுக்கலாம். இதேபோல், ஜெர்மானிய தயாரிப்பு ஊசி மருந்து நெட் இன் என்ற பெயரில் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை போட்டுக் கொள்ள வேண்டும். ஆனால், இந்தத் தடுப்பூசிகளை (அரசு சாராத) பெண்கள் நலக் குழுவினர் எதிர்த்து வருகிறார்கள். திய பக்க விளைவுகள் தவிர்க்கப்படுவதாக உத்தர வாதமில்லை. உடல் பருமன், இதயக் கோளாறு போன்றவை சில. இதே விளைவுகளைத் தரும் செருகுக் குச்சிகள், தோலுக்கடியில் வைத்துக் கொள்ளும் கருத்தடைச் சாதனங்களாக வந்துள்ளன. 1. brillu Gerrgårl _ - Norplant 2. எல்.என்.ஜி.ராட் L.N.G. Rod விசிறி வடிவிலான 6 குச்சிகள். ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை இவை செயல்படுமாம். இந்த எல்லாத் தடைச் சாதனங்களும் அச்சமற்ற போகத்தையே இலக்காக்குகின்றன. 1. ஆணுக்குரிய உறைகள் - பால்வினை நோய்கள் - எய்ட்ஸ் - என்ற தேய்வு நோய் பரவாமல் பாதுகாப்பவை. கருத்தடைச் சாதனமாகவும் பயன்படுத்தலாம். 2. ஆணுக்குரிய விந்துக்குழாய்த் துண்டிப்புச் சிகிச்சை எளிமையானது; நவீனமானது; பக்க விளைவே கிடையாது. கரு வந்துவிட்டால் எப்படி முதிர் விளைவைத் தடுப்பது? 1. அதுதான் கருச்சிதைவு, கருக்கலைப்பு. இது சமூக அச்சத்தின் பலனாக, ஆணின் ஆக்கிரமிப்பு, குரூரங்களை (ஒரு லட்சம் மகப்பேறு) ஏற்றுப் பழிசுமக்கும் பெண்கள் கையாளும் அவசர கால நடவடிக்கைகள் என்றே சொல்லலாம். பாதுகாப்பான முறைகளில் எந்த விவரமும் கேட்காமல் கருக் கலைப்பு செய்துகொள்ளும் வசதிகள் இந்நாட்களில் வந்திருக்