பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 153 கின்றன. மாத்திரைகள் ஊசிகளே போதும் என்ற வசதிகள் இந்நாட்களில் மருத்துவர் பரிந்துரைகள் இல்லாமலே கிடைக்கிற தாகத் தெரிகிறது. ஆனால் முன்பெல்லாம் மருத்துவமனை சென்று, கருவை உறிஞ்சி, சுத்தம் செய்யும் கருவிகளால் எளிய சிகிச்சை செய்து கொண்டு கருக்குழாய் துண்டிப்பு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் பலர். சிறு குடும்ப இலக்கில் வெற்றி பெற்றிருக்கின்றனர் என்றாலும், ஒழுக்கக் கட்டுப்பாடு இல்லாத இளைஞர் சமுதாய உடல், மனநலங்கள் பாதிக்கப்படும் வசதிகள் இவை. பெண் - கருக்குழாய்த் துண்டிப்புச் சிகிச்சை - நவீனமான லேபராஸ்கோபி முறை, இரண்டு குழந்தைகளே போதும் என்ற வகையில், உகந்ததாகும். 2. மங்கல மகப்பேறு பிரசவம் மகப்பேறு நிகழ்ச்சி மருத்துவமனைகளில் நடைபெறுவதே உகந்ததாகும். மகப்பேறியல் மருத்துவர்கள் இதற்கென்றே சிறப்புக் கல்வியும் பயிற்சியும் பெற்ற செவிலியர் இங்கே மட்டுமே இருக்கிறார்கள். பிரசவம் சிக்கலாகும் என்று தெரிந்தால் உடனே சிறப்பாகக் கவனித்து ஆவன செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் மருத்துவர்களும் இருப்பார்கள் என்ற நோக்குடன் பல ஊர்களில் தாய் - சேய் நல மருத்துவமனைகள் சுகாதாரத்துறை சார்ந்து இயங்குகின்றன. இந்த மருத்துவமனைகள் அனைத்துமே அலோபதி மருத்துவத்தை முதன்மையாகக் கொண்டே இயங்குகின்றன. மகளிரின் கருப்பகாலப் பராமரிப்பு, அவள் சுகப்பேறு பெறுவதற்கான ஆலோசனைகளுடன் கூடிய மருத்துவம் எல்லாம்ே அலோபதி முறையில்தான் அளிக்கப் படுகிறது. நமது நாட்டின் அனைத்து மருத்துவமனைகளும் அரசு சார்ந்ததும், தனியார் மருத்துவமனை களும் அலோபதி முறை மருத்துவர்கள், துறை சார்ந்த அறுவை சிகிச்சை வல்லுனர்கள், அதிநவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் செயல்முறை மருத்துவங்கள் என்று மருத்துவத்துறையை மிகப்