பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ மங்கல 164 பெரிய வாணிபத்துறையாக மாற்றியிருக்கிறதென்றால் மிகையில்லை. கரு உயிர் நன்கு வளர்ந்திருக்கிறதா, சிக்கலான நிலையில் பிரசவம் நிகழ முடியாத ஆபத்துகள் நேருமா, குழந்தை முறைபாடுடையதாக வளர்ச்சி பெற்றுவிடுமா என்பதெல்லாம் முன்கூட்டியே அறிய நவீன ஸ்கேனிங்' என்ற வசதி வந்திருக்கிறது. இதுபோன்ற அறிவியல் சார்ந்த நவீன வசதிகள் எதுவும் பெண் தன் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்றவையாக இல்லை என்பது வருந்தத்தக்கதோர் உண்மை. அரசு மருத்துவமனைகளில் பிரசவம் என்று வரும் பெண்கள் நவீனமான மருத்துவ முறைகளுக்கு உட்பட்டே தீரவேண்டி யிருக்கிறது. ஸ்கேன் முறை தவறாகப் பயன்படுத்தப்படுவதும், பெண் கருக்கள், கருவறையிலேயே உருவாகாமல் கரைக்கப் பெறுவதும், ஒரு தனியான வரலாறாகவே நிகழ்கிறது. நமது இந்திய மருத்துவ முறைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் பாரம்பரியம் கொண்டவை. கர்ப்பம் என்பதே மங்கல நிகழ்வு. அநேகமாக எல்லா மருத்துவ முறைகளும் கருவைக் கரைப்பதை ஏற்றிருக்கவில்லை. அலோபதி மருத்துவத்திலும், பட்டம் பெறுமுன் ஆணை எடுக்கும் சடங்கொன்று முந்நாட்களில் இருந்தன. அதில் கருவைக் கலைக்கமாட்டேன் என்பது ஒரு முக்கியமான வாசகம். ஆனால், சத்திய மொழிகளுக்கு இந்நாட்களில் எந்தப் பொருளும் இல்லை. நமது பாரம்பரிய ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகளில் கருவுற்றலும், பிரசவம் வரையிலுமான மருத்துவப் பாதுகாப்பு நெறிகளும், மிக நுட்பமாக உணர்ந்து செயல்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இதை "சஞ்சீவினி' என்ற ஆயுர்வேத - யோகா சிகிச்சை மைய அமைப்பினர், தங்கள் செய்தி - மடல் வாயிலாக மக்கள் பரவலாக அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த அமைப்பு கடந்த பதினைந்து ஆண்டுகளாக முற்றிலும், ஆயுர்வேத முறைப்படியான சிகிச்சைகளை அளித்து பல்வேறு நோய்கள், தீராத நாட்பட்ட நோய்கள் குணமாக்கி வரும் அனுபவம் பெற்றிருக்கிறது. மகப்பேறு' என்ற தலைப்புடன் அவர்கள் வெளியிட்டிருக்கும் இதழில் (ஏப் - 2005) பெண்களின் உடல், பிரசவம் சார்ந்து, அவளறியாமலேயே ஒரு சிகிச்சை - அறுவை முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைச்