பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 155 சுட்டிக்காட்டி இருக்கின்றனர். ஆயுர்வேத மருத்துவ இயலில், ஆரோக்கியமான கருத்தரிப்பு என்பதே உரிய பருவத்தில் ஊட்டச்சத்துடன் கூடிய விளை மண்ணில், நன்கு ஊன்றப்பட்ட நல்ல விதை முளை அரும்புவதற் கொப்பாகக் கூறப்படுகிறது. மனித இனத்துக்கே உரிய மகப்பேறு. கருத்தரிப்புக்குப் பின் தாயின் வற்றியில் வளர்ச்சி பெறும் கருவுக்கும் தாய்க்கும் உரிய சில தனிப்பட்ட உணவுடன் கூடிய மூலிகை மருந்துகள் இம்முறையில் பரிந்துரைக்கப்படுகின்றன. ஒரு பெண்ணின் வாழ்வில் கருவுறுதலும், பிரசவகாலப் பராமரிப்பும் மிக மிக முக்கியமான காலம். இது ஒரு மகிழ்ச்சியான பருவம் எனலாம். அவளை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே குடும்பத்தி னருக்கு முக்கிய இலக்காக இருக்க வேண்டும். அவளுடைய ஆசை களும் விருப்பங்களும் முட்டாள்தனமாகத் தோன்றினாலும் பிறர் அவற்றை அலட்சியம் செய்யலாகாது. நான்காம் மாதத்தில் கரு வளர்ச்சி பெற்று இதயம் தோன்றிவிடும். இப்போதும் இதற்கு முன்பும், சாதாரணமாக நேரக்கூடிய பொது உடல் நலக் குறைவுகளுக்கு மூலிகை மருந்துகள் இருக்கின்றன. இரு இதயங் களைப் பெற்ற தாயின் பிரக்ஞையுடன் இன்னொரு பிரக்ஞையும் தோன்றி வளருகிறது. இதனாலேயே அவளுடைய விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டு மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும் என்று ஆன்றோர் கருதினர். இந்தப் பாதுகாப்பான அணுகுமுறை தாயின் மன உடல் சார்ந்த எந்தப் பாதிப்பும் நேராமல் தவிர்க்கிறது. அவளுடைய உணர்வுகள் பாதிக்கப்பட்டால், வயிற்றில் வளரும் கரு பாதிப்படையலாம்; ஊனமும் நேரலாம் என்று கருதப்பட்டது. வன்முறை அதிர்வுகள், அதிர்ச்சியூட்டக் கூடிய அனுபவங்கள், கடும் உடலுழைப்பு, தீவிர உடற்பயிற்சி, பட்டினி, விரதங்கள், தவிர்க்கப்பட வேண்டும். நீர் - மலம் போன்ற இயற்கை உந்துதல் களை அடக்கலாகாது. ஏடாகூடமாக உட்காருவதோ கரடு முரடான நிலத்தில் படுப்பதோ நல்லதல்ல. காரசாரமான உணவோ, அமித உணவோ உகந்ததல்ல. எளிதில் சீரணமாகக் கூடிய சுவையுடன் கூடிய உணவை, உரிய நேரங்களில் உண்ண வேண்டும். உடல்நலத்திற்கு ஊறு செய்யக்கூடிய குலுங்கு ஊர்திகளில் பயணம் செய்வதை நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும். நெடுநேரம் உறங்குதலும், பகல் உறக்கமும், மதுவருந்துதலும், புலன்களுக்குத் தீமை விளைவிக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்பதும் நிச்சயமாகத்