பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ மங்கல 156 தவிர்க்கப்படவேண்டும். கருவுற்ற ஆறாம் மாதத்தில், கோஷரைம்ச என்ற நெரிஞ்சி முள் கசாயம் உடல்பிடிப்புகளைத் தவிர்க்கிறது. கர்ப்ப காலத்தில் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, கால் விக்கம், முதுகு வலி, சளி, இருமல் போன்ற நலக் குறைவுகளுக்குத் தாயையும் சிசுவையும் பாதிக்காத மருந்துகள் கொடுத்து நலம் பெறச் செய்யவேண்டும். ஒன்பதாம் மாதத்தில் மூலிகை எண்ணெய் கொண்டு, வயிற்றுப் பகுதிகளில் பூசி, மெல்லத் தடவ வேண்டும். மூலிகை எண்ணெயில் ஊறிய தக்கைத் திரிகிளை யோனிப் பாதையில் வைக்கலாம். இந்த எண்ணெய் மருத்துவம், கருப்பாதை, நெஞ்சு, இடுப்பெலும்பு, இடுப்பு, முதுகு, மார்பின் மைய இரு பகுதிகள் எல்லாவற்றையும் மென்மையாக வைக்கிறது. வயிற்றுப் பகுதிகளை, உட்புறங் களைப் பிரசவம் நிகழும்போது கிழிவடையாமல், விரிந்து கொடுக்கவும் கரு உயிர் கீழ் நோக்கி அசைந்து வருவதற்கான பாதையையும் எளிதாக அமைக்கிறது. சாதாரணமாகக் கர்ப்ப காலம் ஒன்பது மாதங்களிலிருந்து பனிரெண்டு வரை நீடிக்கலாம் என்று சுச்ருத சம்ஹிதை கூறுகிறது. பனிரெண்டு மாத கர்ப்பம் மிக மிக அபூர்வம். ஆனால், ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றில் பதினோரு மாத கர்ப்பம் இருந்திருக்கிறது. இந்தக் கர்ப்ப காலப் பராமரிப்பைக் கருத்துடன் பேணிவந்தால் தாயாகப் போகும் பெண் சிரமப்படாமல் மகவை ஈன்றெடுப்பாள். அந்நாட்களில், கிராமத்து மருத்துவப் பெண்டிர் - இத்தகைய மகப்பேறுகளை மிகத் திறமையுடன் கையாண்டு அனுபவம் பதித்திருக்கின்றனர், இந்த மருத்துவச்சிகள். அதிகமான ஆடம்பரங்களில்லாமலே கிராமங்களில், வீடுகளில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே, பேறுகால மருத்துவம் செய்தார்கள். பாலூட்டும் தாய்மாருக்கும், சேய்களுக்கும் நலம் பேணினார்கள். இதுமட்டுமின்றி, பிரசவம் சிக்கலாகும் போதும் இந்த அனுபவம் மிக்க மருத்துவப் பெண்டிர், வயிற்றுச் சேயை, திறம்பட இயற்கையான முறைக்குத் திரும்பத் தங்கள் நுணுக்கமான அனுபவங்களைப் பயன்படுத்தி, சிக்கலில்லாமல், சேயை வெளியேற்றக் கூடியவர்கள். இத்தகைய கர்ப்ப காலப் பராமரிப்பும், திறமை வாய்ந்த மருத்துவப் பெண்டிரும், அலோபதி மருத்துவ முதன்மையில்