பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 167 செல்வாக்கிழந்து வழக்கொழிந்து போயினர். இந்த மருத்துவப் பெண்டிரே அக்காலத்தில், மூச்சு வராமல் பிறக்கும் சேய்களுக்கு மூச்சு வரச் செய்யும் அனுபவமும் அறிந்திருந்தனர். பிரசவம் என்பதே இயற்கையாக நிகழக்கூடியது. எண்ணெய் தேய்ப்பும், நீரில் போடும் மூலிகைக் குளியலும், உடல் நோவை மகப்பேற்று நலிவுகளைப் போக்கி சுகமளிக்கின்றன. தளர்ந்துபோன வயிற்றை இறுக்கிக் கட்டுவார்கள். இந்த வழக்கம் பின்னால் ஏற்படக்கூடிய தளர்ச்சியை, சதைத் தொய்வை, முதுகுவலி போன்ற விரும்பத்தகாத விளைவுகளைத் தடுக்கின்றன. மருத்துவச்சிகள். தாய்க்கும் சேய்க்கும் நலம் விளைவிக்கும் முறைகளைத் தாய்க்கும் நெறிப்படுத்துவார்கள். மருத்துவமனைப் பிரசவங்களே சிறந்தன என்ற இடைவிடாத பிரசாரங்களின் பயனாக, இன்றைய தாய்மார், வசதியற்ற நிலையிலும், பழைய பாரம்பரிய முறைகளைத் தவிர்ப்பதே நலம் என்ற, பழைய விலை மதிப்பற்ற முறைகளை அடியோடு ஒதுக்குகின்றனர். கடன்கிடன் வாங்கியேனும், அரசு மருத்துவமனையை விடத் தனியார் மருத்துவமனை சிறந்ததென்று தேவையற்ற பின்விளைவுகளையும் ஏற்கின்றனர். மருத்துவமனைகளில் மகப்பேற்றுக்கு வரும் பெண்ணுக்கு எந்தவிதமான சிகிச்சை செய்யப்படுகிறது என்ற விவரத்தைக் கல்வியறிவும் பட்டப்படிப்பும் கூடிய பெண்ணுக்கும் அறிவிப்பதில்லை. வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வாதாரங் களுக்குத் தத்தளிக்கும் குடும்பங்களில் இருந்து வரும் பெண் களுக்கோ அவளுடன் வரும் பெண் உறவினர்களுக்கோ வெறும் பணச்செலவு பற்றிய முன் விவரம் மட்டுமே அச்சுறுத்தலாக நெருப்புக்கோடாக விதிக்கப்படுகிறது. இது சிசேரியனாக இருக்கும். எனவே பதினைந்தாயிரம் ஆகும்! என்பார்கள். சிசேரியன் அவசியமா, இல்லையா என்ற பேச்சுக்கே இடமில்லை. தகவல் பெறும் உரிமைகள் அழிக்கப்படுகின்றன. சஞ்சீவ்னி ஆயுர்வேத யோகா சிகிச்சை மையம் வெளியிட்டிருக்கும் செய்திமடல் மகப்பேறு மருத்துவமனைகளில் வாலாயமாகச் செய்யப்படும் எபிஸியோடமி என்பதோர் அறுவைச் சிகிச்சை முறை பற்றித் தெரிவிக்கிறது. இந்த முறை, மகப்பேறு நிகழும்போது, வயிற்புறையின் கீழ்ப்பகுதிகள் தாறுமாறாகக் கிழிவதைத் தடுத்து, பிரசவம் நிகழ்வதைச் சிக்கலில்லாமல் செய்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால்,