பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ மங்கல 168 இதற்கு ஆதரவான சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், பின்விளைவுகள் சிக்கலாகுவதாகவும் விளக்கப் பட்டிருக்கிறது. 1920ம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள மருத்துவக் கட்டுரைகள் தவிர, இது பற்றிய தேவையை, மகப்பேறு மருத்துவத்தில் உலகளவில் புகழ் பெற்ற பாடநூல் எழுதியுள்ள டாக்டர் ஏ.எல்.முதலியாரும் வற்புறுத்த வில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இயற்கையின் நிகழ்வுமுறையைக் கூர்ந்து கவனித்து, தேவையானால் மட்டுமே நாம் குறுக்கிட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்திருப்பதாகவும் குறிப்பாக்குகிறது. இந்தச் செய்தி மடலில் பத்து ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இம்முறை தேவையில்லை என்று கடந்த ஓராண்டாக முடிவெடுத்து மகப்பேறுகளைப் பின்விளைவுகள் இல்லாமல் நிகழ்த்தி வருவதாக தாய் - சேய் நல மருத்துவ மைய இயக்குநரான மருத்துவரின் நேர்முகமும் வெளியாகி இருக்கிறது. அத்துடன் முதல் முகப்பேறு சிசேரியனாக இருந்து, இரண்டாவது பிரவசத்தை இயற்கை முறையில் நிகழ்வதற்கான உத்தியாக 'எபிஸியோடமி என்ற (யோனிப்பாதையில் இருந்து குதவாயில் வரையிலான கீறல்) சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அது பற்றித் தனக்குத் தெரிவிக்கவில்லை என்றும் ஒரு தாயின் அனுபவ நேர்முகம் வெளியிடப்பட்டிருக்கிறது. குழந்தை நான்கு கிலோ இருந்தது. மூன்று வாரங்கள் பேறு பெற்றவள் அசைய முடியாதபடி சிரமப்பட்டாள். ஆய்வுகள் நச்சுத் தொற்றும் யோனிக் கசிவும், ரத்தக்கட்டி ஏற்பட்டு சிக்கலாக்குவதையும் தெரிவிக்கின்றன. புண் ஆறினாலும் மலம், வாயு வெளியாவதைக் கட்டுப்படுத்த இயலாத சிக்கல்களும் விளைகின்றன. பின்னாட்களில் கலவியும் கூடத் துன்பமாவதாகத் தெரிவிக்கிறது. அலோபதி மருத்துவர்கள் வேறு மருத்துவ முறைகளை ஏற்பதில்லை என்பது வெளிப்படை. ஏனைய மருத்துவ முறைகளைப் பயின்ற மருத்துவர்களும் தேவையில்லை என்றாலும், இப்போதெல்லாம் அலோபதி மருத்துவர்கள் கையாளும் கருவிகளைப் பயன்படுத்துவதால் மட்டுமே மக்கள் நம்புகின்றனர். பழைய பாரம்பரிய முறைகளில் அறியாமை இருந்தது. ஒரு கிராமத்தில், பிரசவ வலி எடுத்ததும் ஊர்க் கோயிலின் முன் விட்டுவிட்டு, எல்லாம் அம்மன் பார்த்துக் கொள்வாள் என்று