பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 169 வந்துவிடுவார்களாம். அன்றைய அனுபவம் பெற்ற மருத்து வச்சிகளை இன்று தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மங்கல நிகழ்வு. அது இன்றையச் சூழலில் மன அழுத்தம் கொடுக்கும் நிகழ்வாக மாறியிருக்கிறது. புதியவைகளை ஏற்கலாமா, வேண்டாமா என்ற கருத்துக்கே இடமில்லாமல், மகளிரின் உடல்கள் மீது அவர்களுக்குரிய உரிமைகளை மறுப்பதாகவே சமூக மாற்றங்கள் உணர்த்துகின்றன. இந்தச் சூழலில் தமிழக அரசு, பாரம்பரிய மருத்துவ முறையையும், கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் மகப்பேறு, குழந்தை நலம் பேறு பெற்றதாய்ப் பராமரிப்பு ஆகிய நிலைகளில் பரிந்துரைகளை ஏற்க முன்வந்திருப்பது மிக ஆறுதலான செய்திகள். மாறும் சமுதாயத்தில், மகளிர் உரிமைகள், மகப்பேறு குடும்ப நலம் சமூகப் பாதுகாப்பு ஆகிய நிலைகளில் தகவல்கள் பெற்று, தீர்மானிக்கும் வகையில் மேம்பட வேண்டும். 3. ஹிந்து 17.4.2005 ஞாயிறு கல்பனா சர்மாவின் கட்டுரையின் தமிழாக்கம் இதுதான் முன்னேற்றமா? உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு நேரும் கொடுரங்கள் பற்றிய ஒர் உண்மை அறிக்கை: ஒவ்வோர் ஆண்டிலும், இந்தியாவில் கருவுறும் பெண்களில் ஐந்து லட்சம் பேர் மரிக்கின்றனர். 110 லட்சம் குழந்தைகள் ஐந்து வயது நிரம்பு முன் இறக்கின்றன. நாம் முன்னேறுகிறோம் என்ற கருத்திலிருந்து நம்மைக் கொக்கி போட்டுப் பின்னிழுக்கும் தகவல்கள் இவை. தகவல் தொழில்நுட்பங்களிலும், அவை சார்ந்த வேறு துறைகளிலும், இந்தியா முன்னேறுகிறதென்றும் நம் தொடர்புச் சாதனங்கள் மார்தட்டிக் கொள்கையில் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வதாகத் தோன்றுகிறது. அமெரிக்கப் பத்திரிகை களில் நம் பிரதமர் சிறப்பிக்கப்படும்போதும், நம்மிடையே உலகிலேயே பெரிய செல்வமுடையோர் இருப்பது குறித்தும் நாம்