பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 171 என்ற தன்னார்வக் குழுவும் ஒன்று. மகளிர் மகப்பேறு நலம், உரிமைகளுக்காகத் தம்மை முழுதும் ஈடுபடுத்திக் கொண்டு செயல் படுவதாக அனைத்துலகம் சார்ந்த வகையில் அரசு பெருமைப் படுவதெல்லாம் வெறும் பீற்றல்களைத் தவிர வேறொன்றுமில்லை. உண்மையாகவே அவர்கள் உரிமைகளும் நலங்களும் பேணப் படுவதாக இருந்திருந்தால், கருக்கலைப்புச் செய்து கொள்ளக் கட்டாயப்படுத்தி இருக்கமாட்டார்கள். ஏனெனில் அந்த மகளிரின் விருப்பம் யாதாக இருக்கும், இசைவு தெரிவிப்பார்களா என்ற எண்ணங்களுக்கு இடமே இல்லை. எப்படியானாலும், கர்ப்பம் நீடிக்காமல் தடை செய்ய வேண்டும். உண்மையாகவே அவர்கள் நலம் பேணுபவர்கள், எப்படியோ கருக்கலைப்பு என்று குதறிப் போடுவதோ, கருத்தடைக்கான அறுவைச் சிகிச்சை என்று பட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் சிகிச்சையை வலியுறுத்திச் செய்து அப்படியே விட்டுவிட்டுப் போகவோ துணிய LD ПТI—I—ПГПТ,55 атт. நெறிமுறைப்படி செயலாற்றும் அரசு பெண்களிடம் அவர்களுக்கு உகந்த கருத்தடை முறைகளை விவரித்து ஏற்கும்படி இசைவு பெறவேண்டும். அதற்கெல்லாம் வழியில்லை, அடித்தள மில்லை. கருக்குழாய்த் துண்டிப்பு, அறுவைச் சிகிச்சையே, விதி என்றாகிறது. கருத்தடை அறுவைச் சிகிச்சையில் 97 சதவிகிதம் பெண்களுக்கே செய்யப்படுகிறது. பாதிப்பேருக்கு மேல் இவர்களில் பலருக்கு சிகிச்சைக்குப் பின் ஏற்படும் நச்சுத் தொற்று போன்ற பல சிக்கல்கள் விளைகின்றன. அதற்குப் பின் மருத்துவம் என்பது மிக அபூர்வம். இந்தக் கருத்தடைச் சிகிச்சைகளில் எஞ்சியவர்களில் 4.7 சதவிகிதம் சிகிச்சை பலிப்பதில்லை. சுருங்கச் சொன்னால், மீண்டும் கருத்தரிக்கிறார்கள்! அப்படிக் கருத்தரித்தால் கருக்கலைப்பு மட்டுமே பரிகாரம். இந்தப் பரிகாரம் மரணமாகிய தீர்ப்பை எழுதினாலும் கேட்பார் இல்லை! கருத்தடை அறுவைச் சிகிச்சை: பீகார் மாநிலத்திலும், உத்தரபிரதேசத்திலும் 2002-2003 இல் ஒராய்வை மேற்கொண்ட மக்கள் நலக்குழு, இந்திய அரசு, ஆண் - பெண் இருபாலரின் கருத்தடை அறுவைச் சிகிச்சைகளில் மேற்கொள்ளும் முறைகளுக்கிடையே உள்ள வித்தியாசங்களை அம்பலத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன.