பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ஹறிந்து... 172 ஒன்றிரண்டு விவரங்கள் கூர்ந்து நோக்கலாம். அறுவைச் சிகிச்சைக்கான சாதனங்கள் நச்சுத்தொற்று ஏற்படாத வண்ணம் துாய்மை பேணப்பட வேண்டும். பெண்களின் கருப்பைப் பரிசோதனைகளுக்குப் பின் பயன்படுத்தப்பெறும் கையுறைகள் துய்மையற்றவையாக, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. நடமாடும் சேவைகளில், ஒரு நாளில் 20க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படக்கூடாது. ஆனால், ஆய்வுக் குழுவினர் கண்டறிந்த தகவலின் படி, ஒரு மருத்துவர், ஒரே இடத்தில் இரண்டரை மணி நேரத்தில் 75 அறுவைச் சிகிச்சைகள் மேற்கொண்டிருக்கிறார். சராசரியாக இரண்டு நிமிடங்களுக்கு ஓர் அறுவைச் சிகிச்சை. முழு அலட்சியம்: பெரும்பாலான இந்த சிகிச்சை பற்றிய ஆய்வுகள் ஒரே கதையைத்தான் சொல்கின்றன. பெண்களுக்கான மருத்துவம் என்பதில் மிகவும் மெத்தனமான அலட்சியப் போக்குதான். கருத்தடை அறுவை - அல்லது சாவு இரண்டுக்குமிடையே வேறு தேர்ந்தெடுக்க எந்த வழியுமில்லை. வாரணாசி மாவட்டத்தில் தாக்தாக்பூரில் ஒரு பெண், ஆறு ஆண்டுகளில் நான்கு முறை பிரசவித்திருக்கிறாள். நான்காவது மகப்பேறுக்குப் பிறகு அவள் கருத்தடை அறுவைச் சிகிச்சைக்கு இசைந்தாள். அறுவைச் சிகிச்சையின் போது, மருத்துவர் தவறுதலாக அவள் குடலைப் பற்றி இழுத்ததால் அவள் மேசையிலேயே மயங்கி ஒடுங்கிவிட்டாள். அவள் குடும்பத்தாருக்குச் சொல்லி அனுப்பி, அவர்கள் அவளை மாவட்ட மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லுமுன் யமலோகம் சென்றுவிட்டாள். அவள் எப்படி மரணமடைந்தாள் என்றெல்லாம் குடும்பத்தாருக்குத் தெரிவிக்கவில்லை. அரசு சாரா தன்னார்வக் குழு ஒன்று தலையிட்டு வழக்குப் பதிவு செய்தபின், இறுதியில் அவள் கணவனுக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது! இதுபோன்ற நிகழ்வுகள் உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி, இந்திய நாட்டின் ஏனைய பகுதிகளிலும், மிகுதியாக இருக்கலாம். இவர்கள் ஏழைப் பெண்கள். இவர்களால் பெருகிவருவதாகச் சொல்லப்படும் மக்கள் தொகைக்கு எதிரான போராட்டத்துக்குரிய விலையாக இவர்கள் உயிர்கள் பறிக்கப்படுகின்றன. இத்தகைய மேலிட மனோபாவங்கள் நீடிக்கும்வரை உண்மையான மக்கள்