பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 31 களுக்கும் என்ன தொடர்பு? இன்றும் சினிமாப்பட பூசை செய்யும் போதும்கூட ஐயர் வந்து தீ வளர்ப்பது, 'பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கையினரும் கூடத் தவிர்க்காமல் இருப்பது ஏன்? பரம்பரை வழக்கங்கள், மூடநம்பிக்கைகள் என்று ஒருபுறம் சொல்லப் படுகிறது. என்றாலும் அறிவியல் வளர்ச்சிகள் மனித சமுதாயத்தை நம்பிக்கையில்லா எதிர்காலத்தை நோக்கியிருப்பதன் அச்சத்துக் குரிய வெளிப்பாடாகவே மீண்டும் மூடநம்பிக்கைகள் புதுப்பிக்கப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், மனிதர் விலங்குகளைப் போல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தபோது, தி' புதிய பரிணாமத்தை இசைத்தது. காட்டுத் தீயில் பொசுங்கிய நிணம் உடலுக்கு நன்மை செய்தது. ருசி மிகுந்தது. வெம்மையில் பாதுகாப்பை உணர்ந்தனர். குகைகளில் வாழும்போது அந்தத் தீயைப் பராமரித்து எதிரிகளைத் தேடி அழிக்க, வீழ்த்தப் பயன்படுத்தினர். ஆனால், அந்தத் தீ அணைந்துபோனால் மீண்டும் அதை உருவாக்கும் வித்தை முதலில் தெரியவில்லை. மரத்தோடு மரம் உராய வன்னி கடைந்து தீ மூட்டத் தெரிந்த மக்கள், அது தெரியாத மக்களைவிட மேலாகக் கருதி, தீ மூட்டும் வித்தையைத் தங்களுக்குள் இரகசியமாகவே வைத்திருந்தனர். வெடிமருந்து இரகசியம், அணுகுண்டு இரகசியம் போன்றவைதாம் இவை. இந்த உயர்வே ஆதிக்கத்துக்குரிய சக்தியாயிற்று. மண், பெண், பொன், இந்திரிய சுகங்கள் எல்லாவற்றுக்கும் ஆதாரமான 'தீ அக்னி பகவானின் உருவிலேயே அவர்கள் இயற்கையை வழிபட்டனர். மகப்பேற்றுக்கான வீரியம், அதுவும் அக்னியே. மன்னன் ஒரு குதிரையை அனுப்பி, அதன்பின் படை வீரர்களை அனுப்புவான். அந்தக் குதிரை கால்பட்ட இடங்களனைத்தும் மன்னனுக்குச் சொந்தமாகும். குதிரையை எந்த மண்ணுக்குரியவன் பிடித்துக் கட்டினாலும் பின்னே வரும் படை அவனை நொறுக்கி அதிகாரம் அழிக்கும். அத்தகு வல்லமையுடையவனே அக்குதிரை யை அனுப்பி வைப்பான். திரும்பி வந்த குதிரை வேள்விச் சாலையில் பலியிடப்படும். அங்கே மன்னனின் பட்ட மகிவழிகள் சந்ததி வேண்டுவோர் இருப்பர். வேள்வித் தீ வளர்க்கும் மந்திரம் இசைக்கும் புரோகிதர் ‘ரித் விக்' எனப்படுவோர் சடங்குகளைச் செய்வார்கள். அடிமைப் பெண்கள் கருவுற்று மக்களைப் பெற்றிருப்பார்கள்.