பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../தாயாகும்... 30 வருவதுபோல் நூறு பெண்கள் வாடகைத் தாய்மார்களானார்களா? செயற்கைக் கருத்தரித்தல் பற்றி இதில் பேசப்படுகிறதா? மாறாக காந்தாரி ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள் என்றும் அவள் பெயர் துச்சலை என்றும் சொல்லப்படுகிறது. மகாபாரத வரலாற்றில் இந்தச் சகோதரி பற்றி ஒரு குறிப்பும் பிறகு இல்லை. மாயமாகிப் போன பெண்ணோ? 7. வேள்வித் தீ நம் இராமாயண காவியத்திலும் வேறுபல புராணங்களிலும் அரசருக்கு ஆயிரக்கணக்கான அந்தப்புரப் பெண்கள் (அடிமை கள்) இருந்தபோதிலும், ஒன்றுக்கு மேற்பட்ட, இரண்டு மூன்று பட்டமகிஷிகள் என்ற உயர்ந்த இடத்தில் சந்ததியைத் தோற்று விக்கும் உரிமை பெற்ற மகாராணிகள் இருந்த போதிலும், பிள்ளை இல்லாக்குறை என்ற நிலை எப்படி வந்தது? மகப்பேறின்மை என்பது பல்வேறு கதை, புராணங்களில் மிகப் பெரிய குறையாகக் காட்டப்பட்டிருக்கிறது. ருவிகள் கன்னிப்பெண்களைக் கூடிய போது, அது பாலியல்வன்முறை என்று பார்க்கப்படாமல் கர்ப்பம் கொடுத்தல், முதிர்ந்த பிரும்மசரிய வித்து என்று, மங்களமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், போகத்துக்காகவே வாழ்ந்த அரச குலத்தினர், தங்கள் வீரியங்களை அந்தப்புர மகளிரிடமும் அல்லது போகத்துக்காகவே ஒதுக்கப்பட்ட பொதுமகளிரிடமும் இழந்த நிலையில் இளமைப் பருவம் முழுவதையும் நாடு பிடிக்கும் போரிலும் களியாட்டங்களிலும் இழந்துவிட்ட நிலையில் வீரிய மிக்க சந்ததியைத் தம் மகாராணிகளிடம் பெறமுடியாததுதான் மக்கட்பேறின்மையாகிறது. இதற்காக வேள்விகள் இயற்றப்படுகின்றன. அசுவ மேதம், புத்திரர்களை வேண்டிப்பெறும் வேள்வி. யாகபுருடன் பாயசத்துடன் தோன்றினான். அதை மூன்று மனைவியரும் அருந்தி, கருப்பமடைந்தனர் என்று சொல்லப்படுகிறது. இந்த 'வேள்வி' என்று தீ வளர்க்கும் சடங்குகளுக்கும் திருமணம் முதல், மரணக்கொள்ளிவரை செய்யப்படும் அனைத்துச் சடங்கு