பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 29 கிறார்கள். அரசுரிமைக்காகப் பிள்ளைகள் அவசியமாயிற்று. இந்தப் பிள்ளைகள் ஐவருக்கும் பாண்டு தந்தையல்ல. ஆனால், இவர்கள் பாண்டுவின் மைந்தர்கள். பாண்டவர்கள் என்றுதான் அறியப்பட்டார்கள். இந்த ஐவராகிய பஞ்ச பாண்டவர்களில், அருச்சுனன் மட்டுமே, பார்த்தன் (ப்ருதவின் புதல்வன்) கெளந்தேயன் (குந்தியின் புதல்வன்) என்று அறியப்படுகிறான். அதாவது குந்தியின் தந்தையார் ப்ருதாவுக்கும், குந்திபோஜனுக்கும் இவன் சந்ததியாவான்! திருதராட்டிரனோ கண்ணற்றவன். விட்டுமன் அவனுக்குக் காந்தார தேசத்துப் பேரழகி காந்தாரியைக் கொண்டுவருகிறான். வீட்டுமனுக்கு யாரே எதிர் நிற்க முடியும்? சகுனியாகிய சோதரனும் தோள் வலியில்லாமல் எதிர்நிற்க முடியாமல், தந்திரமிகுந்தவனாக, சோதரியுடன் வருகிறான். காந்தாரி குருட்டுக் கணவனுக்கு உண்மையான கற்பரசியாகக் கண்களைக் கட்டிக்கொண்டாள் என்றும், பொறாமைக்காரி என்றும், குந்தி கருவுற்றது கண்டு அந்தப் பொறாமையில் பல செய்யத் தகாத செயல்களைச் செய்தாள் என்றும் நம்பத்தகாத பொய்ம்மைகள் புனைந்துரைக்கப்பட்டிருக்கின்றன. திருதராட்டிரன் மக்கள், பாண்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டதுபோல், குறிப்பிடப்படவில்லை. குரு குலத்துக் கான சந்ததிகள் என்று கெளரவர்கள்’ என்று அறியப்பட்டார்கள். நூறு குடும்பங்களில் வைத்த பிண்டம் என்று சூசகமாகச் சொல்லப் படுவதின் பொருள் இதுவே. நூறு வீடுகளில் இருந்து நூறு பெண்கள், மன்னனின் விந்தணுக்களைப் பெற்றார்கள் என்று சொல்லலாம். முன் தலைமுறையில் வியாசரிடம் அனுப்பப் பெற்ற அம்பாலிகா கண்களை மூடிக்கொண்டு அவனைக் கூடியதால் குழந்தை குருடனாகப் பிறந்தது என்ற காரணத்துடன் பொருத்திப் பார்க்கலாம். காந்தாரி தன் எதிர்ப்பைக் காட்டவே கண்களைக் கட்டிக்கொண்டாள் என்று சொல்லலாமல்லவா? என்னென்ன கட்டுக்கதைகள்? s குந்தி ஐந்து பிள்ளைகளுக்குத் தாயாகக் கருப்பமுற்று விட்டாளே தனக்கு இன்னமும் பேறு வாய்க்கவில்லையே என்று உலக்கையால் அடிவயிற்றில் இடித்துக்கொண்டாளாம் காந்தாரி. பிண்டங்கள் சிறிதும் வளர்ச்சியடையாத நிலையில் பிண்டங்களை நூறு கும்பங்களில் வைத்ததில் அவர்கள் நூறு புதல்வர்களாக கெளரவர்களாகத் தோன்றினார்களாம். நம் தமிழ் மெகா சீரியலில்