பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ தாயாகும்... - 28 உனக்குத் திருமணமானாலும் அவனால் உனக்கு மகப்பேறு வாய்க்கவில்லை என்றாலும் நீ கற்பு குலைந்ததாகப் பதற வேண்டாம் என்றுரைத்ததாகக் கொள்ளலாம். பூப்பெய்தாத நிலையில் கன்னி எப்படித் தாயானாள்? பூப்புக் குருதி வெளிப்படாத நிலையிலும், சினைப்பை முதிர்ந்து முதல் முட்டை வெளியாகியுள்ள நிலையில் விந்தணு வந்ததும் கருவுறுதல் நிகழக்கூடும். குந்தி கானகத்தில், அவள் செவிலி அல்லது அடிமைப் பெண்ணுடன் பத்து மாதங்கள் கழித்துப் பிள்ளை பெறுகிறாள். கன்னி, கையில் குழந்தையுடன் எப்படி மாளிகை திரும்புவாள்? முன் தலைமுறைச் சத்தியவதி பராசரருடன் கூடி மகனைப் பெற்றபோது அந்த மகவைக் கங்கையில் விடவில்லை. அப்போது பெண்ணுக்கு அவள் உடல் மீதும் கருப்பைச் செயல்பாட்டிலும் உரிமை இருந்தது. ஆனால், திருமணம் என்பது, ஆணாதிக்கக் குலவழியை மெய்ப்படுத்தும் சடங்காக பெண்ணின் முக்கியமான உரிமையை அவளிடம் இருந்து பறித்துவிட்டது. குந்தி, தன் மகனைப் பேழையில் வைத்துக் கங்கையில் மிதக்கவிட்டாள். மேலாம் வருணத்தவனுக்குப் பிறந்த பிள்ளை, தேரோட்டியின் மனைவி ராதையினால் கண்டெடுக்கப்பட்டு தாயின் பெயரைத் தாங்கி, ராதேயன், சூத்திரன் ஆனான். குல தாய்மைப் பேறு. மீண்டும் கன்னியாக, அவள் அரசவம்சத்துக்குச் சந்ததி பெற்றுத்தர பாண்டுவுக்கு மனைவியானாள். பாண்டுவும் ஆண்மையற்றவன். அவனுக்கு ஒரு மகரிஷியின் சாபம் இருந்ததாகவும், ஒரு பெண்ணைக்கூடினால்தலை வெடித்துவிடும் என்ற அந்தச் சாபம் குந்தியுடன் கூடுவதைத் தவிர்த்தது என்றும் சொல்லப்படுகிறது. குந்தி மட்டுமில்லாமல் மாதரி என்ற இன்னோர் அரச குலப் பெண்ணும் இவனுக்கு மனைவியானாள். குந்தி தனக்குத் தெரிந்த சந்ததி பெறும் தேவ மந்திரத்தை மாதரிக்கும் சொல்லிக் கொடுக்க, அவர்கள் வேறு யார் மூலமாகவோ (ருவிகளோ?) ஐந்து பிள்ளைகளைப் பெறு