பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 27 பெயராலும் அறியப்படுகிறாள். அவளுக்குப் பனிரண்டாண்டு களாகவில்லை. துர்வாச முனி அவள்தந்தையைத் தேடிக் கோபமாக வருகிறார். சினத்துடன் வந்த முனிவரை வரவேற்று மகள் குந்தியை அவருக்குப் பணிவிடை செய்யத் தந்தை அனுப்பிவைக்கிறார். அப்போது அவள் பூப்பெய்தியிராத கன்னி. அவளுடைய பணி விடைகளில் மனம் மகிழ்ந்து விடைபெறுமுன் அவளுக்கு ஆறு மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்ததாகவும், அந்தந்த மந்திரங்களுக் குரிய தேவர்கள் வந்து அவளுக்குப் புத்திரர்களைக் கொடுப்பார்கள் என்று அருளியதாகவும் சொல்லப்படுகிறது. பூப்பெய்தியிராத கன்னி, விளையாட்டாக ஒரு மந்திரத்தைக் கூறிப்பார்த்தாளாம். உடனே கண் கூசும் ஒளியுடன் கதிரவன் அவள் முன் தோன்றி, ஒரு மகனைப் பெற அருளினானாம். கவச குண்டலங்களுடன் கருணன் பிறந்தானாம். பாரத நாட்டின் திருமண முறைகள் என்ற ஆய்வு நூலில் அதன் ஆசிரியர் காசிநாத் ராஜ் வாடே, வேத புராண சூத்திரங்களின் உட் பொருளை விளக்கியுள்ளார். இன்றும் பண்பாட்டுக் குறைவென்று கருதப்படும் மக்கள் பேச்சில், ஆபாசம் என்பது முறையற்ற ஆண், பெண் புணர்ச்சி பற்றியதாகவே இருக்கிறது. பாலியல் சார்ந்த உறுப்புகளைக் குறிப்பிடும்போது கூட, இலைமறை காய் என்ற ஒளிவு மறைவு காக்கப்படுகிறதுதான் பண்பாடென்று கருதப் படுகிறது. தடை செய்யப்பட்ட உறவு முறையில், புணர்ச்சியில் ஈடு பட்டதாகப் பெண்ணையே குறிப்பாக்கி வசைமொழிகள் ஏவப் படுகின்றன. ஆனால், எக்காலத்திலும் ஆண் குற்றம் புரிந்தவனாகக் கருதப்படுவதில்லை. எனவே, துர்வாசர், குந்தியின் எதிர்காலத்தை நினைவிலிருத்தி அவளுக்குப் பயன்படக்கூடிய மந்திரங்களை உபதேசித்தார். சூரியனிடம் அவள் கருக் கொண்டபோது, அவன், அவளிடம் 'பெண்ணே உனக்கு மங்களமான கர்ப்பத்தை நான் அளித்திருக்கிறேன்’ என்றான். அவள் நடுநடுங்கிப் போனாள். 'அஞ்சாதே, பெண்ணே. நீதாய்மையடைந்தாலும் கன்னிதான்!” என்று கூறி வாழ்த்திச் சென்றதாகக் கதை விவரிக்கப்பெறுகிறது. சூரியனின் இடத்தில் முனியை நிறுத்திப் பார்க்கலாம். அடுத்து