பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../தாயாகும்... 25 கருதப்பட்ட சமூக வழக்கங்கள் இயல்பாகக் கருதப்பட்டிருக் கின்றன. அயோனிஜா என்று குறிப்பிடப்படும் சீதை, திரெளபதி ஆகிய நாயகிகள், புராண காப்பிய நாயகியர். அயோனிஜா என்றால் ஒரு பெண்ணின் பிறப்புறுப்பின் வழிவராதவர். (ஆயின் சிசேரியனா என்று கேட்கலாகாது) இவர்களைப் பூமியே பெற்றதாகக் கருதப்படுகிறார்கள். அல்லது வேள்வித் தீயில் உதித்தவர்களாகக் கருதப்பட்டனர். ஆனால், எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டு ஆண்டாள் எப்படி அவதரித்தாள்? அயோனிஜா என்றால், முறைப்படி உரிமையாகக் கொண்ட கணவன் மனைவியர் கூடலில் பிறந்தவர்கள் இல்லை என்பதேயாம். எந்த ஆணும், எந்தப் பெண்ணையும் விழைந்து கூடலாம் என்று பெண்ணுக்கு இருந்த அவள் உடல் மீதுள்ள உரிமை, ஆண் அவளைத் தன் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தபின் பறிக்கப்பட்டது. "கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ, திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ என்று கண்ணன் மீது மையல் கொண்ட நிலையில் பாசுரங்களை இயற்றிப் பாடிய ஆண்டாள் எப்படி ஒரு தாய்வயிற்றில் உதித்திராமல் துளசிச் செடியின் கீழ் திருவவதாரம் செய்தாள்? இதெல்லாம் பெண்களுக்குத் தம் உடலின் மீதுள்ள உரிமை பறிக்கப்பட்டதை அழகிய பொய்களால் அலங்கரித்து, தெய்வீக மாக்கப்பட்ட செய்திகள். ஒர் ஆண் முறையற்ற ஒரு பெண்ணைக் கூடுவது நியாயமாகவே நெறிப்ப்டுத்தப்பட்டிருக்கிறது. ருவழியானாலும் இல்லறத்தானானாலும் தனக்கேற்பட்ட உந்துதலை, நெருக்கடியை ஒரு பெண்ணிடம்தான் இறக்கிக் கொள்கிறான். சிறந்த ஞானச் சான்றோரிடம் தனக்கு ஒரு மகவு வேண்டிப் பெண்கள் விழைந்ததான செய்திகள் இடம் பெற்றிருந்தாலும் ஆண் எந்தப் பெண்ணையும் தன் ஆதிக்கத்துக்கு உட்படுத்தும் ஏகபோக உரிமைதான் வரலாறுகளில் முதன்மை பெற்றிருக்கிறது. ஆனால், ஆண், முறையற்ற உடலில் பெண்ணைத் தாயாக்கும்போதுதானே தந்தை என்ற உண்மையை ஏற்பதில்லை. மகாபாரதத்துக் குந்தி, ப்ருத என்ற அரசனின் மகள். அந்த அரசனின் நண்பன் குந்தி போஜனுக்கு அவள் மகள் என்று அந்தப்