பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 25 சுருக்குகள் இல்லை. ஆனால், அணைத்திட்டங்கள், காடழிப்பு கள், மின்னாற்றல் என்று வந்தபின், விவசாயத்தின் அடித்தளம், பணம் என்றாகிவிட்டது. எல்லோருக்குமான உழைப்பு, உணவு என்பது மாறி, பணத்தின் அடிப்படையில் தேவையற்ற ஆடம்பரங்கள் வந்தன. முப்பதடி ஆழக்கிணறு, நூறடி தோண்டும் சக்தி படைத்தவனால் வறண்டது. விவசாயம் தடம் புரண்டது. சோறு போட்டவன் மூன்றாம் நிலை அடிமையானான். இடம் பெயர்ந்தான். பெண்குழந்தைகளும், ஆண்குழந்தைகளும் ஆதாரமிழந்து, பணயத்துக்கான பொருட்களாயினர். குசேலர் ஏழையாக இருக்கலாம். ஆனால், ஒரு பிடி அவலோடு வறுமை தீர்ந்திருக்கும். அடுத்த பிடியின் ஆடம்பரங்கள் மற்ற வரைச் சுரண்டும் தத்துவம் மூன்றாம் நிலையில் வருங்காலத்தலை முறை இடம் பெயர்ந்து, முறுக்குப் பிழியவும், தடை செய்யப் பட்ட இருண்ட மூலைகளில் கருகவும் போகலாமா? குழந்தைத் தொழிலாளர், விபச்சாரம், எல்லாமே மூன்றாம்பிடி அவலையும் 'கண்ணன் வாயில் போட்டுக் கொள்ள அனுமதித்த பலன். ஏழையென்றும் அடிமையென்றும் இந்தியாவில் இல்லையே, முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடமை, என்று பாடியவர் பாரதி பொருளுக்கு வறுமையுற்று நலிந்த காலத்தில், எட்டையபுரம் மன்னனுக்குச் சீட்டுக்கவி எழுதி அனுப்பினார். அதில், 'நின் சந்நிதியில் நான் பாட, நீ கேட்டு, ஜயப்பறைகள், சாற்று வித்து, சாலுவைகள், பொற் பைகள், ஜதி பல்லக்கு லயப்பரிவாரங்கள் முதற் பரிசளித்து பல்லூழி வாழ்க!' என்று அந்தணராக வாழ்த்தும் முரண்பாடு நெஞ்சில் இடிக்கிறது. பசி தொலைய வேண்டும். அதுவரை சமத்துவம் சரி, பின்னர், சமத்துவ சிந்தை தொலைந்து போகுமோ? 6. தாயாகும் பெண் வேதப்பாடல்களில் கற்புக்கோட்பாடோ, ஆண் பெண் கூடலில் பிற்காலங்களில் விதிக்கப்பட்ட கோட்பாடுகளோ இல்லை. ஒரு வகையில் பிற்காலங்களில் முறையற்ற கூடல் என்று