பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ பகிர்வுத் தத்துவம்... 24 இருக்கும் இளம் பருவ நண்பன் கண்ணனிடம் மனைவி பொருள் வாங்கி வர யோசனை சொல்கிறாள். குருகுலத்தில் கல்வி பயின்ற நாளில், அந்தண வகுப்பில் பிறந்த குசேலரும், ஆயர் குலத்தில் வளர்ந்த கண்ணனும் நெருங்கிய நண்பர்கள். மன்னனை வெறுமனே சென்று காணலாகாது. கையுறையாக, காகைப் புல்லில் விளைந்த கதிர் மணிகளைச் சேகரித்து அதைக் கொண்டு அவல் தயாரித்துக் கணவரிடம் பிள்ளைகளுக்குத் தெரியாமல் கொடுக்கிறாள். கண்ணன் இந்த ஏழை அந்தணரை மாளிகை வாயிலில் வந்து அன்புடன் அணைத்ததுமின்றி அண்ணியார் கொடுத்த புல்லரிசி அவலைக் கேட்டு வாங்கி ஒரு பிடி, இரண்டு பிடி என்று உண்ணுகிறான். மூன்றாவது பிடியை அவன் உண்ணுமுன் மனைவியாகிய ருக்மணி கையைப் பற்றித் தடுத்து விடுகிறாள். அந்தணர் பொருள் கேட்க வந்தார். இந்த அன்பில், செல்வச் செழிப்பில் மூழ்கியவராக இரப்பதற்கு மறந்து போகிறார். வறிய நிலையிலேயே திரும்புகிறார். ஆனால், குடில் இல்லை; மாளிகை. தன் குழந்தைகளை, மனைவியை அடையாளம் தெரியவில்லை. பட்டுப்பட்டாடைகள், வயிரங்கள், ஏவலர் என்று குசேலர் குடும்பம் மாறிவிட்டதாம்! ஒரு பிடி அவலில் பசிதீர்ந்தது; இரண்டாம் பிடி அவலில் உபரியான பசுக்கள், மாட மாளிகை, பட்டு, பொன்னணி, ஏவலர் என்று செல்வம் கூடியது. மூன்றாவது பிடியையும் அவர் உண்டிருந்தால், நாமே அவருக்கு அடிமை களாகப் போவோம்’ என்ற சூக்கும உணர்வோடு ருக்குமணி தடுத்தாளாம். இந்தக் கதையில் இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பின்னான வரலாறே அடங்குவதாகக் கொள்ளலாம். எல்லோருக்கும் வாழ்வாதாரமான உணவு, உடை, உறையுள் என்பதே அன்றைய தலைவர்களின் கனவாக இருந்தது. அணைத் திட்டங்கள் வருமுன், நம் விவசாயப் பொருளாதாரம் ஏழைகளின் உழைப்பில், கிடைத்த நீரில், விளைவிப்பதில் நிலை கொண்டிருந்தது. இந்நாள் பெண் சிசுக் கொலை நடக்கும் பிரதேசங்களில் கிணற்றுப் பாசனங்களில் ஆணும் பெண்ணும் இணைந்து உழைத்தார்கள். செல்வப் பங்கீடு களில் இன்றைய ஏற்றத் தாழ்வுகள் இல்லை. அதிக மக்கள் அதிக உழைப்புக் கைகள், ஆணானாலும், பெண்ணானாலும், ஏற்றத் தாழ்வில்லா உழைப்பு. உழைப்பு, உணவு, பின்னரே போகம். திருவிழா, களியாட்டங்கள், கற்புக் கோட்பாடுகளின் கயிற்றுச்