பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 23 பெண்களின் சமுதாய வரலாறு, போராட்ட வரலாறாகவே தொடருகிறது. பெண்கள் அடிமைகளாகத் தம்மை ஏற்றுக் கொண்டதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. ஆணின் வன்முறைகளைக் குறைக்கவே இவள் அடிமைத் தனத்தை ஏற்றுக்கொள்கிறாள். இவள்தாய்; பொறுக்கிறாள்; அன்பு செலுத்துகிறாள். இவளால் ஒரு முக்கியமான இன்றியமையாத சமுதாயக் கடமை நிறைவேறுகிறது. இவளால் மட்டுமே சமுதாய உற்பத்திக்கான ஒர் உயிரைக் கருவில் வளர்த்து மண்ணின் மாண்பை விளக்க முடியும். அறிவு, ஆற்றல், வலிமை, நுண்மை, செயல்திறன், அனைத்துக்கும் ஆதியானவள் இவளே! வேதங்களில் எல்லாமும் பகிர்ந்துகொள்ளும் தத்துவம் சொல்லப்படுகிறது. இந்தப் பகிர்வுத் தத்துவமே அமரத்துவம் வாய்ந்தது. ஒவ்வொருவரும் பிறர் நலங்களைக் கருதி வாழும் போது சமத்துவம் எய்த முடியும். 'ஒரு சக்கரத்தின் மையப் புள்ளியில் இணையும் ஆரக்கால்கள் போல் ஒன்றாக இயங்குவீர்! என்பது அதர்வண வேதத்தின் சம்வன சூக்தம். ஆனால் எப்போதும் எய்த இயலாத சமத்துவங்களே, பசி - பட்டினி, வண்மை செல்வம் என்று சமுதாய மாந்தர்களைக் கூறு போட்டிருக்கின்றன. குசேலர் ஏழைப் பிராமணர். தம் மனைவியின் மூலமாக அவருக்கு இருபத்து ஏழு குழந்தைகள் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. குறைந்த பட்சம் பதிமூன்றுக்கு மேல் பிரசவங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். இரட்டை, இரட்டை, மூன்று என்று மக்கள் பிறந்திருக்கலாம். இருபத்து ஏழு என்பது என்ன கணக்கு என்று கேட்கலாம். நட்சத்திரங்கள் இருபத்து ஏழும் குழந்தைகளாகப் பிறந்தன என்று சொன்னாலும் கதை சுட்டும் கருத்து நட்சத்திரங்களைப் பற்றியது அல்ல. அதிக மக்கள் செல்வம், வறுமை, பசிப்பிணியால் கடுமையாகப் பாதித்ததுதான் கருத்து. இதற்கு மாற்று, வளமை தேடுவதுதான். பிராமணருக்கு உடலுழைப்புத் தொழில் தெரியாது. பிச்சை எடுப்பது - உஞ்ச விருத்தி - கடவுளின் கல்யாண குணங்களைச் சொல்லி நடந்து வருகையில், அவர் வயிற்றுக்குக் கிடைக்கும்படி உள்ளவர் பிச்சை இடுவார்கள். அவ்வைப் பாட்டியே கூழுக்குப் பாடினாள். ஐயம் இட்டு உண்' என்றாள். ஏற்பது இகழ்ச்சி என்றும் முன்னுக்குப் பின் முரணாகச் சொல்லி வைத்தாள். குசேலரை, மன்னனாக