பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ பகிர்வுத் தத்துவம்... 22 வறுமையுமாகக் காட்டில் அலைந்த ஒரு குடும்பத்துப் பையன் இரண்டாவது மகனை சுனச்சேபனை நூறு பசுக்களைக் கொடுத்து வாங்கி விடுகிறான். தனக்குப் பதிலாக, சுனச்சேபனை பலிபீடத்தில் தலையைப் பிணிக்கையில் அவன் அழுகிறான். அப்போது அங்கு வரும் விசுவாமித்திர முனிவர், அதிதியாம் ஆதித் தாயைப் போற்றும் பாடல்களை அவனுக்கு இசைக்கச் சொல்லிக் கொடுக்கிறார். சுனச்சேபன் விடுபட்டான். ஒருகால் தெய்வத்தை ஏமாற்ற, பூசணிக்காயை நரபலிக்கு மாற்றாக, இரத்தக் குழம்பு (போலிதான்) வெடிக்க உடைத்தார்களோ அன்று? இந்த இரத்த வெறி தலைவாங்குக் கலாசாரம் இன்றும் அடையாளங்களாகத் தொடருகின்றன. நாய், பூனை போன்ற விலங்குகள் (வீட்டில் பேணி வளர்க்கப் படாதவை) இப்போதும் முதல் குட்டி கருப்பையை விட்டு முழுதும் வெளிவருமுன், முகத்தை வளைத்து யோனிவாயில் தோன்றும் முகத்தைக் கவ்விப் பற்றிக் குரூரமாகத் தின்று விடுகின் றன. அவற்றுக்கும் மறைவிடங்கள் தேவை. இரத்தத்தின் சுவடு கூட இல்லாதபடி நக்கிச் சுத்தப்படுத்திக் கொள்ளும்; பின்னரே ஓர் அரைமணி சென்றபின், அடுத்த குட்டிகள், இரண்டு அல்லது மூன்று வெளியே வரும். அவை முன் குட்டியை விட, அநேகமாக அளவில் சிறியவையாக இருக்கின்றன. ஒரு தாயின் பிரசவ வேதனையில் பசிதாங்கும் உணவும் முக்கியமாக இருக்கலாம். முதற் பையனைக் கொடுப்பேன் என்ற பிரார்த்தனை, எந்த ஒரு பேருண்மையின் அடையாளமோ? தாய். அவளுடைய படைப்புக்கும், காத்தலுக்கும் அடிப்படையே அழிப்புக் குரூரம்... அவளே எல்லாவற்றுக்கும் சொந்தக்காரி. இந்த அனைத்துச் சொந்தக்காரி, அடிமைப் பெண்டாகும்போது, அவளுக்கே அவள் மீது உரிமை மறுக்கப்படுகிறது. இந்த உரிமை மறுப்பு ஒரேயடியில் நிகழ்ந்துவிடவில்லை. திரெளபதை, சூதில் பணயப் பொருளானாள். மாதவிலக்கு, ஒற்றையாடையில் இருக்கிறேன்' என்று சொல்லும்போது கயவர்கள் அவளை அவைக்கு இழுத்து வந்து மானம் குலைக்க முற்பட்டார்கள். அவளால் மகாபாரதப் போர் மூண்டது. தொடர்ந்து காலம் இயங்குகிறது.