பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 21 மாறாக வியாசனிடம் சந்ததி பெற அனுப்பி வைக்கப்பட்டனர். கண்பார்வையற்ற திருதராஷ்டிரனும், சோகையாகப் பாண்டுவும் தந்தையின் வாரிசுகளாகத் தோன்றினர். இந்த ஆதிக்க பரம்பரை யின் சங்கிலியில் முடிச்சுக் கோவையாக விளங்குகிறாள் குந்தி. இவளுடைய சோக வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இன்னமும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தான் வயிற்றில் வைத்துப் பாதுகாத்த மகவை, இரத்தமும் சதையுமாகக் குப்பைத் தொட்டியிலும், நீர்க்காலியிலும் வீசியெறியும் கொடியவளாகத் தாய் மாறுகிறாள். 5. பகிர்வுத் தத்துவம் விதிகள் இல்லாத நகரச் சந்திகளில் இன்றும் அமாவாசை என்றால், சிறப்புப் பூசை என்றால், திருஷ்டிப் பரிகாரம் என்று ஒரு வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. கோள்களின் நடமாட்டம், கிரகணம் என்று நேரும்போது, பூவுலக மாந்தர் தம் பிறப்பு நேரத்தையும் பாதிக்கும் தீய பலன்கள் என்றால், அதற்கும் தாம் செய்யும் பரிகாரம் சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருப்பதாக அனைத்து மக்களாலும் பின்பற்றப்படுகிறது. வாழ்வியல் அச்சங் களால் இந்நாளைய மாந்தர், இந்த அறிவியல் தெளிவுகளின் உச்ச நிலையிலும், குருட்டு நம்பிக்கைகளை முற்றிலும் தீவிரமாகப் பற்றி வருகின்றனர். அத்தகைய ஒரு நடவடிக்கை, பூசணிக் காய் உடைத்தல். பாவம் பூசணி! அதனுள் குங்குமத்தைக் கொட்டி ரத்தம் சிதறினாற்போல் வழிநெடுக உடைக்கப்படுவதற்காகவே பூமித்தாய் அதைப் படைத்ததோ என்று தோன்றுகிறது. இந்தப் பூசணிக்காய் - நரபலியை நினைவுறுத்தும் வழிபாடு. தெய்வ வழி பாடாக, நரபலி அறிவியல் நோக்கும், அன்பு, பாசப் பரிணாமங் களும் மலர்ந்திராத சமுதாயக் காலத்தில் இருந்தது. பிள்ளையில்லாத ஒர் அரசன், தனக்கு முதற் பிள்ளை பிறந்ததும் அவனை வழிபடும் தெய்வத்துக்குப் பலி கொடுத்து விடுவதாக வேண்டிக் கொண்டா னாம். ஆனால், அந்தப் பிள்ளையிடம் அதைச் சொல்லவில்லை. அவனுக்குப் பருவம் வந்த பின்னரே, தெய்வத்துக்கு நேர்ந்து விடப்பட்டவன் என்று புரிந்தது. அரச குமாரன் அல்லவா? வளமையின் அறிகுறி பசுக்கள். அதிகமான பிள்ளைகளும்