பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../உனவினால்... 20 இவர்களைச் சேர்ந்த பெண்டிர், மனைவியர் - நாயகர்கள் இழந்த நிலையில் மாற்றாரைச் சேர்ந்து விடுவர். அந்நிய குலம், அப்படி நேர்ந்தால், வருணக்கலப்பும் குல நாசமும் விளையும். இவர்களுக்கு நீர்க்கடன் ஆற்ற யாருமே இருக்கமாட்டார்கள். பெண்களின் துஷ்டத்தனம் விளைவிக்கக்கூடிய போரிதனில் ஈடுபடமாட்டேன்’ என்றுதான் அருச்சுனன் முக்கிய காரணம் காட்டுகிறான். இதே மகாபாரதத்தில் பராசரர், சத்யவதி என்ற மீனவப் பெண்ணைக் கங்கைப் பரப்பில் படகில் செல்லும்போது உந்தல் ஏற்பட்டுவிட, ஒன்றிணைகிறார். இதன் விளைவாக, சத்தியவதி ஒர் ஆண் மகவைப் பெறுகிறாள். பராசரர், புலனடக்கமும் மேலாம் அறிவும், ஞானமும் ஒருங்கிணைந்த முனிவர். சத்தியவதியும் விழைகிறாள். வேதங்களைத் தொகுத்தும், பாரதம் எழுதியும் இந்திய மரபை உயர்த்திப் பிடிக்கும் வியாசரே அந்த மகன் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கூடலில் ஆணாதிக்கமும் இல்லை; பெண் கவர்ச்சியும் இல்லை. இருபாலரின் சமமான உணர்வுகளின் உன்னத வெளிப்பாடு என்று கொள்ளலாம். ஆனால், தொடரும் தலைமுறைகளில் தாயாண்மைச் சமுதாயத்தைத் தொடர சந்தனு மன்னரின் முதல் மனைவி, கங்கையின் மகனை பீஷ்மன் பிரும்மசரிய விரதமேற்கச் செய்தாள். அவர் பரம்பரை தொடர, அவளுடைய மகன்களுக்குத் தன் வலிமையினால் வேற்று அரசர்களை அச்சுறுத்தியே அரச குமாரி களைக் கவர்ந்து வந்தான். அம்பை, அம்பாலிகா, அம்பிகா ஆகிய மூவரில் அம்பை சாலிய அரசகுமாரனைக் காதலித் திருந்தவள். கவர்ந்து வந்தபின் உண்மையறிந்து வீட்டுமன் அவளை விடு கிறான். ஆனால் இவனுடைய தோள்வலிக்கு அஞ்சிய சால்வன் இவளை ஏற்க மறுத்தான். மீண்டு வந்து கவர்ந்து வந்தவனை மணம்புரியக் கெஞ்சினாள். தன் விரதத்துக்குப் பங்கம் நேரக்கூடா தென்று அவளை மறுத்த வீட்டுமனை அவள் கொல்வதாகச் சபதம் எடுத்தது வேறு வரலாறு. முதன் முதலில் பெண் ணியக் குரல் எழுப்பிய வரலாற்று நாயகி அம்பை. சத்தியவதியின் மைந்தர் இருவராலும் சந்தனுவின் சந்ததிகளாக தந்தையாதிக்க அரச குமாரர்களைப் பெற இயலவில்லை. அம்பிகா, அம்பாலிகா இருவரும் தங்கள் விழைவுக்கும் விருப்பத்துக்கும்