பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 19 பெண், இயற்கையின் பிரதிநிதியாவாள். அவள் குழுத் தலைவியாக இருந்த காலத்தில், அறிவியல் என்ற கண், வாழ்க்கை யின் வசதிகளைப் பெறத் தொடங்கி இருக்கவில்லை. அந்த அறிவியல் பார்வையில் சமுதாய உணவு, உடை, மருத்துவம், எல்லாவற்றுக்குமான தொடக்கத்தைப் பெண்ணே பெற்றாள். ஏனெனில் முதுகில் மகவைச் சுமந்துகொண்டு உணவைத் தேடியவளும் தோலாடை தைத்தவளும் விதைகள் போட்டுப் பயிர் விளைவிக்க முனைந்தவளும் அவளே. இதைத் தன் மனித சமுதாயம் என்ற நூலில் ராஹால் ஸாங்க்ருத்யாயன் நன்கு விவரித்திருக்கிறார். இந்த வசதிகள் தேவைகளாக முதிரும்போது, சேமிக்கும் முறைகளும், தன்னலங்களும் சொந்தம், சொத்து என்ற உடமை உணர்வுகளும் அவற்றின் காரணமாகப் போர்களும் பகைத்தியும், அழிவுகளும் விரியத் தொடங்கின. தேவைக்கு மேல் உபரி என்ற செல்வம் ஒருபுறம் சேர, இன்னொரு புறம் தேவைக்கேற்ற பொருள் இல்லா வறுமை, உழைப்பாற்றலையும் உடமையாகக் கொள்ளும் கூறு, சமுதாயத்தில் பொருள் சார்ந்த பிளவைத் தோற்றுவித்தது. ருக் வேதத்தில் அடிமைக் கூறுகள் துலங்குகின்றன. குலமரபுச் சமூகங்களுக்கிடையேயான போர்களில் வெற்றி பெற்றவர் களுக்குத் தோற்ற சமூகத்தினர் அடிமைகளானார்கள். அடிமைப் பெண்கள் தங்கள் எசமானர்களுடன் தொடர்பு கொண்டு ஆண் மக்களை அதிகமாகப் பெற்றால், அவர்கள் எசமானர்களின் மனைவியரின் நிலைக்கு உயரலாம். ஏனெனில் அடிக்கடிப் போர் நிகழும்போது இவர்களுக்கு ஆண் மக்கள் அதிகமாகத் தேவைப் பட்டார்கள். வேதப் பாடல்களில் ஆண் மக்களை வேண்டு வதுதான் பிரார்த்தனையாக இருக்கிறது. மகாபாரதம், ஒரு வகையில் மனித குலத்தின் வரலாறு எனலாம். பெண்களின் பல்வேறு கீழ்முகப் பரிணாமம் இதில் நன்கு விளங்குகிறது. கீதைப் பேருரையில் அருச்சுனன், தன் சுற்றத்தாரையும் வணங்குவதற்குரிய சான்றோரையும் குருமாரை யும் எப்படிக் கொல்வேன் என்று வருந்தி, பலவீனமடைந்து வில்லையும், அம்பையும் கீழே போட்டு விட்டு ஒய்ந்து போனான். ‘இவன் போர் புரியேன்” என்று சொன்னதாக மட்டுமே பொது வாகப் பரவலாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அது ஒரு பொதுக் காரணம்தான். இந்த மாவீரர்களைக் கொன்று குவித்தால்,