பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../உணவினால்... 18 ஒளிருகிறாள். இன்றும் விண்கலம் இயக்குவதில் இருந்து விற்பனைப் பெண்ணாகப் பணிபுரிந்தாலும் அவளுடைய தன்னலமற்ற அமுதுபாலிக்கும் இயல்பு உயிர்த்திருக்கிறது. தாய்மைக்குரிய பண்பே, தலையாய அமுது வழங்கும் பணியில் நிலை பெற்றிருக்கிறது. சமுதாய உற்பத்தி, உணவு உற்பத்தி இரண்டுக்கும் அவளே பொறுப்பேற்றிருந்த நாட்களில் ஆண் ஆதிக்கம் பெற்றுவிடவில்லை. அவளின் இயக்கமே, ஆற்றலின் வெளிப்பாடே அவளுக்கு வியப்புக்குரியதாக இருந்தது. அவள் கருவுறுவதற்குத் தாமே காரணம் என்று ஆண் கண்ட அறிவே, அவன் ஆதிக்கத்துக்குள் அவளைக் கொண்டு வருவதற்கு முதற்படி எனலாம். இயற்கையின் ஆற்றலை வியப் போடும் அச்சத்தோடும் ஆதிமனிதர்அணுகியிருந்தனர். தாய் தலைவி, தாய் தெய்வம் என்ற கருத்தியல் தகர நாயகன் ஒருவனே; ஏனைய உயிர்களனைத்தும் அவன் ஆளுகையில் பெண்களே! என்ற நாயக நாயகி தத்துவம் உணர்த்தப் பல்வேறு வகைகளில் அந்தக் கருத்தியலைப் பதியவைக்கும் பாடல்களும் வழிபாடுகளும் இந்திய மக்களின் சிந்தனைத் தடங்களை நெறிப்படுத்தி இருக்கின்றன. இன்னும் காளி, துர்க்கை, மாரி போன்ற நாயகரில்லாத தெய்வங்களிடம் மக்கள் பயபக்தியுடன் ஏதும் இன்னல் விளைவிக்கலாகாது என்று வழிபடுகின்றனர். எல்லைக் காவல் தெய்வங்களனைத்தும் பெண்களுக்குச் செய்த அநீதிகளை உள்ளத்தில் தேக்கி, அதற்கான பரிகாரம் போல் வணங்கப்படும் தெய்வங்களேயாம். கொள்ளை நோய்கள், வெள்ளம், தீவிபத்துகள் என்று கட்டுப்படுத்த இயலாமல் சமுதாயத்தில் தீமை வரும்போதெல்லாம் இத்தகைய தாய்த் தெய்வங்களையே வழிபட்டு, குருதிப் பலிகொடுப்பதும் கூட நிகழ்கிறது. அறிவியலில் மகத்தான முன்னேற்றம் கண்டு விண்வெளியையும் வசப்படுத்த இயலும் என்று மனித குலம் மார்தட்டிக் கொள்ளும் இந்நாளிலும் இதற்கெல்லாம் அப்பாற் பட்டு பேரழிவுகளைத் தடுக்க இயலாதென்ற ஓர் அச்சமும் மனித குலச் சிந்தைத் தடங்களிலும் இழையோடுகிறது. எந்த நாகரிகமும் வெளியுலகத் தொடர்பும் இல்லாத ஆதிவாசிகள் அடர்ந்த காடுகளில் எப்படி இயற்கைப் பேரழிவை முன்கூட்டியே உணர்ந்து பாதுகாப்பு செய்துகொண்டனர் என்பது அறிவியல் வல்லாரைப் பின்னோக்கிப் பார்க்கச் செய்கிறது.