பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. உணவினால் உயிர்கள் LDக்களின் நல்வாழ்வை அவ்வப்போது நேரும் பஞ்சங்கள், பாதித்த வரலாறுகள் நம் புராணங்களிலும் காப்பியங்களிலும் காணக் கிடைக்கின்றன. பஞ்சம் என்பதன் மறுபக்கம் வறுமையும் பசிப் பிணியும்தான். அன்னத்தினால் உயிர்கள் தோன்றுகின்றன. மழையினால் உணவு (அன்னம்) கிடைக்கிறது. மழை சிறந்த வேள்வியின் பயனாய் உண்டாகிறது என்று கீதை கூறுகிறது. 'வேள்வி என்பதே தன்னலமற்று மனிதர், இயற்கையைப் பேணிக்காப்பதுதான்’ என்று இராமகிருஷ்ணரின் உரை விளக்குகிறது. புல்லும் மரமும் கரியுமாறு எங்கும் அழல் வெம்மை மிகுந்து உயிர்கள் மடிந்த பசிப்பிணிக்கு மாற்றாக, காப்பிய நாயகி மணிமேகலை, அமுதசுரபியை ஏந்தி உலகின் பசிப்பிணி ஆற்றுகிறாள். இங்கும் மணிமேகலைக் காப்பியத்தின் ஆசிரியர், சாத்தனார் மக்களின் உடல், உணவாகிய ஒரு தொகுதியாகும் என்ற மணி மந்திரத்தைத்தான் தம் நாயகிக்கு ஒதியிருக்கிறார். உணவு இல்லையேல் எதுவும் இல்லை. தன்னலமற்று, பிறர் துயர் தீர்ப்பதும், உயிர்களை நேசிப்பதும் ஆறறிவு படைத்த மாந்தரின் முதற்கடமையாகிறது. மனித இனம் தோன்றி விலங்குகளைப் போல் கொன்று தின்று காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலத்திலிருந்து, நாகரிகப் பரிணாமம் எய்திய காலமெல்லாம், பெண்ணே அதற்கான கூறுகளை முன்னெடுத்துச் சென்றிருக்கிறாள். கருவினைத் தாங்கி, தன்னுடல் உதிரத்தையும் உயிர்த்துடிப்பையும் வழங்கி சமுதாய உற்பத்திக் கான முதல்வியாக அவளே திகழ்ந்திருக்கிறாள். தன்னிலிருந்து வெளியான உயிரின் தொப்புள்கொடியைத் துண்டித்து, மார்பில் தேக்கிய அமுதை ஊட்டி அதை வளர்க்கிறாள். தன் மகவுக்காக அவள் எதையும் செய்கிறாள்; அபாயங்களைக் கடக்கிறாள்; பொறுக்கிறாள். ஒருபுறம் கன்றின் தோலை உரித்து இறைச்சியை உணவாக்கினாலும், மறுபக்கம் அவள் கனிந்த அன்பின் திரளாக 2- - 2