பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மருந்துகளும், உயிர்க்காக்கும் பேறு மருந்துகளும் இல்லாத காலத்தில் தாய் சேய் உயிர்களை மனிதாபிமான நேயத்தோடு காப்பாற்றினார். அவருக்குக் கடவுள் நம்பிக்கை இருந்திருக்க வில்லை. சில கணவன்மார்கள் வயது முதிர்ந்த நிலையில் தங்கள் தவறுகளையும் அந்த மருத்துவரின் மேன்மை பற்றியும் எடுத்து ரைத்தபோது நெஞ்சம் நெகிழ்ந்தது. பெண் கோரிக்கையற்றுக் கிடக்கும் பலாப்பழமன்று. அவள் மனிதப்பிறவி. தாய்மைப் பேறு ஒன்றோடு நிற்பது கட்டாயக் கற்பு நெறி என்றால், அந்த நெறியைக் காக்க கணவனும் அவளை மட்டும் பொறுப்பாக்காமல் ஒத்துழைக்க வேண்டும். அவள் கருவறையை அடுத்தடுத்துக் கல்லறையாக்கும் அறிவியல் சாதனைகளிலோ அல்லது கருவறையைச் சவ்வுக்காடாக அடைக்கும் சாதனைகளிலோ உலகம் உய்யப் போவதில்லை. வாழவைத்த கடல், மக்களை வாரி விழுங்கச் சுருண்டு வந்ததும், காலம் காலமாகப் பசுமையும், நெடிதுயர்ந்த மரங்களுமாக வாழ வைத்த குன்றுகள், மலைகள் பனியாய்ப் பொழிந்து தன் மக்களை அழித்ததும் சாதாரண நிகழ்வுகள் அல்ல. எல்லா இடங்களிலும் பெண்களும் குழந்தைகளுமே பலியா கிறார்கள். பெண் தன்னையே அழித்துக்கொள்ளும் கருமைக்குக் காரணமான புகைகளைச் சிறுசிறு ஒழுக்க நெறிகளைக் கொண்டு தூய்மைப்படுத்துவோம். பெண்ணுக்கு உரிமை என்பது, அறியாமை நீங்கிக் கல்வி பெறுமுன், நான், என் உடல், என் மனம், என் நோக்கு என்ற இலக்குகள் அவள் பெற வேண்டும். அவள் கொடுமைக்காரியாக்கப்படுகிறாள். ஆனால், எந்த நிலையிலும் அவள் கொடுமைக்காரியல்லள்; அவள் தாய். அதை மறந்து அவளை அவளுக்கே விரோதமாக்கச் செய்யும் ஆதிக்கச் சாவிகளைப் பிடுங்கி ஆழ்கடலில் போடுவோம். அல்லது குழிதோண்டிப் புதைப்போம்! பாரத அன்னை மட்டுமல்ல, உலக அன்னையே உவந்து வாழவைப்பாள்! - ராஜம் கிருஷ்ணன்