பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 33 விழைவை வெளிப்படுத்தத் துண்டும். திரை விழும். குதிரையின் இடத்தில் ரித்விக் இருப்பார். அரசியின் முழு விழைவுடன் கூடல் நிறைவேறும். இதுவே சந்ததி பெற விழையும் வேள்வி. வேள்விகள் அனைத்துமே மன்னனின் ஆதிக்கங்களை அழுத்தமாகப் பதிப்பதின் அடையாளங்களாகவே கருதத் தோன்றுகிறது. இந்த உண்மைகள், யுகயுகங்களாக ஆணின் ஆதிக்கங்களைக் கருத்தரியாமை என்ற மனரீதியான எதிர்ப்பைப் பெண் காட்டியிருக்கிறாள் என்று கொள்ளலாம். இன்றும் வாழ்வதற்கு இன்றியமையாத தேவைகள் இல்லாத இடங்களில் ஆதிக்கங்கள், பெண் எதிர்ப்பைக் காட்டவே வழியின்றி, கோழை, அடிமைச் சமுதாயம் உருவாகிறது. இத்துணை அறிவியல் முன்னேற்றங்கள் வந்த பின்னரும், பெண் திருமணமாகி இரண் டாண்டுகள் கருவுறவில்லை என்றால், அவளையே உடல் சார்ந்து குறை கூறும் வழக்கம் தொடர்கிறது. சில குடும்பங்களில் ஆண் அவளுடன் கூடுவான். ஆனால் அவளுக்குத்தான் உடலின் மீதுள்ள உரிமை போன பின் ஆணின் ஆளுகைக்கு அடங்கிய வளாக ஆக்கிரமிப்பை ஏற்கும்போதும், விழைவு இயல்பு அழிகிறது. மன ரீதியான எதிர்ப்பு ஏற்படுகிறது. அவள் கருப்பை சந்ததிச் செழிப்புக்கு ஏற்ப மலருவதில்லை. ருக் வேதப் பாடலில் பத்தாம் மண்டலத்தில் கருச் சிதைவு ஏற்படாமல் காக்கக்கூடிய மந்திரம் வருகிறது. அதில் கணவனோ, சகோதரனோ, காதலனோ, யாரால் அவள் தாய்மைக்குரிய கருத்தரித்திருந்தாலும், அந்தக் கரு கலையும்படியான தவறு நேரக்கூடாது (அது யாராக இருந்தாலும்!) என்று பொருள்படும்படி இருக்கிறது. இது ஆண் ஆதிக்கம், பெண்ணுடலை உரிமையாகக் கொள்ளாத காலமாக இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. வேதம் பெண் படிக்கலாகாது என்று ஆணாதிக்கச் சமுதாயம் தடை செய்திருக்கிறது. ஆணாதிக்கத்தின் விளைவாகவே பெண் மனத்தளவில் பாதிக்கப்படுவதாலேயே கருத்தரியாமை என்ற எதிர்ப்பைக் காட்டி இருக்கிறாள் என்று கொள்ளலாம். இந் நாட்களில் அறிவியல் சார்ந்த ஆய்வுகள் பெண்ணின் உடற் கூறியலைப் பரிசோதித்து, கருத்தரியாமைக்கான காரணங்களைத் தெளிவுபடுத்துகின்றன. ஆனால், இயற்கை பெண்ணைத் தாய்மைப் பேற்று சிறப்பியல்புகளுடன் படைத்திருக்கிறது. அவள் 2_ – 3