பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ வேள்வி... 34 பிற்காலங்களில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் அபலை’ யல்ல. பேதையல்ல. பலவீனமானவளல்ல. உணர்ச்சிமய மானவள். அந்த உணர்ச்சியின் மறுபக்கம் எதையும் தாங்கி வெல்லும் ஆற்றலாகும். அது உயிர்களனைத்திலும் காட்டும் கருணை; அன்பு. இவள் பிறந்தபோதே, இத்தகைய இயல்பு களிலிருந்து பிரிக்கப்பட்டு அவள் உடலே அவளுக்குரியதல்ல என்ற அச்சில் அழுத்தப்பட்டு உருவாக்கப்படுகிறாள். இந் நாட்களில் ஒவ்வொரு தொலைக்காட்சித் தொடரிலும் ஒரு பெண் மருத்துவர், இரண்டாண்டுகள் திருமணமாயும் கருவுறவில்லை என்று சோதனைக்கு வந்த நாயகியிடம் 'உன் கருப்பை வளர்ச்சியுறவில்லை; உனக்குக் குழந்தை பெற வாய்ப்பே கிடையாது' என்று தயக்கமின்றி உடைத்து அவள் மனதையும் சுக்குநூறாக்குவாள். உடனே மாமியாராகப்பட்டவள் இவளுக்கு மணவிலக்குத்தந்துவிட்டு, மகனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க முன்வருவாள். சமகால வாழ்விலும் சந்ததி இல்லாத குடும்பங்களில் ஆண் பரிசோதனை செய்துகொள்ள உட்படுவ தில்லை. பெண்கள் கல்வி கற்று, பல வகைகளிலும் தங்கள் ஆற்றலை நிரூபித்திருக்கும் நிலையில் தன்னைவிட எல்லா வகையிலும் தாழ்ந்த நிலையில், வயது குறைவாக உள்ள பெண்ணையே ஆண் விரும்புகிறான். சமூக நியாயமே அவன் பக்கத்தில்தான் இருக்கிறது. எந்த வகையிலும் மனைவி தற்சார்பை வெளியிடலாகாது. கூடலில் அவனுடைய ஆதிக்கத்தை உள்ளுர எதிர்க்கும் பெண், அவனுக்கு அடங்காதவளாகிறாள். தற்சார்பு டைய பெண்கள்திருமணமான சில நாட்களிலேயே மணவிலக்குப் பெற முனைகிறார்கள். இத்தகையை பெண்கள் திருமணம் கூடாத முதிர்கன்னிகளாகவே இருப்பதும், மரபுகளை மீற வேண்டிய கட்டாயங்களும் கொலைகளும் தற்கொலைகளும் நேருவதும் சமகாலச் சமூகத்தில் பரவலாக நிகழ்கின்றன. இதை எழுதும்போதும், திருமணமான மூன்றே மாதங்களான மனைவியை ஒரு கணவன் அடித்தே கொலை செய்திருக்கிறான்' என்ற செய்தி வருகிறது. 28ம், 24-மான இஸ்லாமிய தம்பதி; பத்திரிகைச் செய்தியில் வரதட்சணைப் பேயைக் காரணமாகக் காட்டி இருக்கிறது. இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்களுக்கு அதிகமான பாதுகாப்பும் சுயமரியாதையும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அங்கு மணமகனே மணமகளுக்குப் பொருள்