பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 35 கொடுக்க வேண்டும். வரதட்சணைப் பேய் அவனைப் பீடித்ததா, அவளைப் பீடித்ததா? கலவியும் கருத்தரித்தலும் துலமான அறிவியல் மட்டும் சார்ந்த நிகழ்வுகளல்ல. ஆறறிவு படைத்திராத உயிரினங்கள் கூடி இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன. மனிதன் அந்த விலங்குகளின் இயற்கை இனப்பெருக்கத்தின்' குறுக்கே புகுந்து அவற்றின் வாழ்விடங்களை, செடி, கொடிகளை, நீர் நிலைகளை ஆதிக்கம் செலுத்திவந்தான். பயனாக, இந்நாள், விளைநிலங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்காகவும், வீடுகளில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்காகவும் மட்டுமே பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுவதாக ஒரு கணக்கு அறிக்கை வெளியாகிறது. இந்நாட்களில் பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் கீற்றுமிளநீரும் என்று பாரதி கனவு கண்ட இளநீரில் கூட பூச்சிக் கொல்லி மருந்தின் நெடி கலந்திருக்கிறது. சுனாமிப் பேரலைத் தாக்குதலில் வெளிநாகரிகம் கட்டுப் பாடாகத் தவிர்த்து கானகத்தோடு இயற்கை வாழ்வு வாழ்ந்த அந்த மான் பழங்குடியினர், அபாயத்தை முன்கூட்டியே அறிந்து தங் களைப் பாதுகாத்துக் கொண்ட தகவல்கள் வந்திருக்கின்றன. பழங்குடியினர் பல மரபுகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், அவர்கள் இயற்கையை அழிப்பவர்களல்லர். இயல்பான உணர்வுகளை மதிக்கும் சமத்துவத்துக்கும் ஒரு நெறிமுறை அமைத்துக் கொண்டிருந்திருக்கின்றனர். மத்தியப்பிரதேசப் பழங்குடியினரிடையே குமரப் பருவ ஆண் பெண்கள் இரவானதும் களித்து நடனமாடும் ஒரு பழக்கம் குழுத் தலைவன் கண்காணிப்பில் நிகழ்ந்துவந்திருக்கிறது. இதற்கு 'கெளதுல் என்று பெயர். பழங்குடிச் சமுதாய ஆய்வாள ஆங்கிலேயர் கூடப் பார்க்க இயலாத அந்த நடனம் தவறான கற்பனைகளுக்கோ, கவர்ச்சிகளுக்கோ வாய்ப்பாகலாம். அதே இளைஞர் சிறிது காலம் சென்று மணம் புரிந்துகொள்வார் என்றும் நெறியுடன் வாழ்கிறார்கள் என்றும் பால்வினை நோய்களே இல்லை என்றும் கூறப்பட்டது. (இப்போது எப்படியோ? இதே மத்தியப்பிரதேசத்தில் நாகரிக மக்களுடன் பழகி சீர்திருந்திய மக்களைப் பெருமளவு பால்வினை நோய்கள் தாக்கியதாகச் செய்திகள் வந்தன.)