பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ துறவும்... 38 அப்போது சமாதி நிலையை அடைந்தாராம். இது புதிய இல்லறம். சாரதையின் தாய், 'இப்படி ஒரு பைத்தியத்துக்கு என் பெண்ணைத் தாரை வார்த்தேனே? அவளை அம்மா என்றழைக்க ஒரு பிள்ளைக்கு வழியில்லாமல் போயிற்றே!' என்று வருந்தினாராம். 'உன் மகளை அம்மா என்றழைக்க உலகு முழுவதும் மக்கள் வருவார்கள்!' என்றாராம் இராமகிருஷ்ணர். உலகு போற்றும் விவேகானந்தர்; ஒரு மகனே போதாதா? இராமகிருஷ்ணருக்குப் பிறகு அன்னை பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். அவருடைய கருத்துக்கேற்ப அன்னை குங்குமம், வளையல், காப்பு ஆகிய மங்கல அணிகளைத் துறக்காமல் இறுதிவரை உலகு போற்றும் அன்னையாகவே வாழ்ந்தார். 'அன்னை' என்று கொண்டாடிவிட்டு பெண்ணுடலின் ஒவ்வோர் உறுப்பையும் அழகு, மாட்சிமை என்று விவரிக்கும் போலிகள் இந்த இல்லறத்தில் இல்லை. இது எத்தனையோ யுகங்களில் ஒன்றாகப் பூக்கும் அபூர்வம் நமக்குத் தெரிந்து, காந்தியடிகள், கஸ்துரிபா, நான்கு பிள்ளைகளுக்குத் தாயான பின் உடல் நலிவால் துன்புற்ற காலத்தில் மக்கள், நாட்டு விடுதலை என்ற அறப்பணிகளை மேற்கொள்ள குடும்பம் பெருக்குவதும், அன்னையின் உடல்நலத்திற்குக் கெடுதல் விளைவிப்பதுமான போகத்திலிருந்து - பிரும்மசரியம் மேற்கொள்ள உறுதி கொண்டார். அதிலும் கஸ்துாரிபாவின் இசைவு தேவைப்பட்டது. அவரும் பெண் போகம் அனுபவித்தவர். பெண்ணைத் தாயாகப் போற்றும் மரபு இந்திய நாட்டின் பேச்சு வழக்கில்கூட உயர்ந்திருக்கிறது. பெண் குழந்தையைக்கூட அம்மா என்று குறிப்பிடும் மரபில் அந்தப் பண்பு துலங்குகிறது. அந்தப் போற்றுதலுக்குரிய தாய், வெறும் போகப் பொருளாகப் பார்க்கப்படும்போது? பெண் போகம் என்பதற்கு ஒரு விளைவு உண்டு. விளைவைப் பற்றிய உணர்வு சிறிதும் இல்லாமல், சுமப்பவள் அவள்தானே என்று ஆண் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறான். சுமப்பது அவள் கடன் என்று கருதுபவன், உணவுத் தேடலின் பொறுப்பை மறுக்கவும் முடியாது. ஏனெனில் பெண்ணுக்கு எல்லா உரிமை களையும் மறுப்பவன், பொருள்தேடும் பொறுப்பைத் தான் வைத்துக் கொண்டவனாகிறான். இந்தச் சுமையையும் மறுக்கும் வண்ணம், "அம்போ என்று குழந்தைகளையும் தாயையும் விட்டுவிட்டு, கணவன் துறவு நெறியை ஏற்பதற்கு வாய்ப்பாக